Sunday, September 28, 2008

காதலில் விழுந்தேன் படத்துக்கு ஆஸ்கார் விருது

தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பவரும் காதலின் விழுந்தேன் திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளது. இந்த விருது பெற்ற இப்பட கதாநாயகன் நகுலன் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு நாக்க முக்க என்ற பெயரையே வைக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் திரைப்படத்தை தடுக்க நினைப்பது சூரியனை கையால் மறைப்பது போல ஆகும் என்று சம்மந்தப்பட்ட டிவி சேனல்கள் கொக்கரித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இப்படி ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது அக்குழுமத்தை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தான் தயாரிக்கும் புதிய படங்கள் சிலவற்றில் நகுலனே நாயகன் என்று அறிவித்துள்ளது மூன் பிச்சர்ஸ் நிறுவனம்.

தொடர்ச்சி...

http://spl.nellaitamil.com/tamil/?p=63

11 comments:

ers said...

தயவு செய்து யாரும் இங்கே பின்னோட்டம் இட வேண்டாம். இத்தளத்தை விரைவில் காலி செய்ய போகிறோம். முடிந்தால் தமிழ்மலரில் ( எனக்காகவே உருவாக்கப்பட்டது) பின்னோட்டம் போடுங்க)

தருமி said...

//இங்கே பின்னோட்டம் இட வேண்டாம். //

நாங்கல்லாம் நாங்க சொல்றதையே கேட்க மாட்டோம். நீங்க சொன்னா கேட்ருவோமா... !!

ers said...

என்னய்யா பயங்கர ரோதனையா போச்சு... கைல வாட்ச் கட்டுங்கன்னு சொன்னா காதுல மாட்டி உடுறீங்களே...

குசும்பன் said...

//தயவு செய்து யாரும் இங்கே பின்னோட்டம் இட வேண்டாம். இத்தளத்தை விரைவில் காலி செய்ய போகிறோம். முடிந்தால் தமிழ்மலரில் ( எனக்காகவே உருவாக்கப்பட்டது) பின்னோட்டம் போடுங்க)//

அப்படியே செஞ்சுடுறோம்:))) இங்கே பின்னூட்டம் போட மாட்டோம்.

ers said...

குசும்பு ஜாஸ்தி தாங்க

மங்களூர் சிவா said...

//
காதலில் விழுந்தேன் திரைப்படத்தை தடுக்க நினைப்பது சூரியனை கையால் மறைப்பது போல ஆகும் என்று சம்மந்தப்பட்ட டிவி சேனல்கள் கொக்கரித்து வரும் நிலையில்
//

koyyaaala

மங்களூர் சிவா said...

//
தருமி said...

நாங்கல்லாம் நாங்க சொல்றதையே கேட்க மாட்டோம். நீங்க சொன்னா கேட்ருவோமா... !!
//

repeattu

ers said...
This comment has been removed by the author.
ers said...

தெரிமா சொல்லிபுட்டேன் சாமி... நீங்க எங்க வேணாலும் பின்னோட்டம் போடுங்க... ஒங்க இஷ்டம்...

தருமி said...

//தெரிமா சொல்லிபுட்டேன் சாமி... நீங்க எங்க வேணாலும் பின்னோட்டம் போடுங்க... ஒங்க இஷ்டம்...//

அடடா... என்னங்க இது. இதுக்குப் போய் ...

சரி உடுங்க ... அதுசரி அந்த தமிழ்மலரின் தொடுப்பு தந்தா அங்க பாய்ஞ்சு வந்திருவோம்ல...

ers said...

தமிழ்மலருக்கு தொடுப்பு கொடுத்துடுறேன்.