அழகான அம்மாவை
இப்போதெல்லாம்
யாருக்கும் பிடிக்கவில்லை
பெண்பார்க்கும்
படலத்தில்
முதல் ரவுண்டில்
வென்றாராம் அம்மா!
இப்போதெல்லாம்
யாருக்கும் பிடிக்கவில்லை
அம்மாவின் முகத்தில்
லட்சுமியே
குடியிருக்கிறார்ரென
ராமானுஜம் ஐயர்
அடிக்கடி சொல்வாராம்
-இப்பொதெல்லாம்
யாருக்கும் பிடிக்கவில்லை.
அம்மாவை பார்த்து
போன காரியம்
சுபமென சொன்னவர்கள்….
இப்போது
மூழி வருகிறாள்
காரியம் வெளங்காது
என்கிறார்கள்.
இப்போதெல்லாம்
யாருக்கும் பிடிக்கவில்லை
ஆனாலும்
அம்மாவின் அழகு
மட்டுமே என்
கண் முன் நிற்கிறது….
அவளின்
முகத்தில் தெரியும்
ரேகையை போல தெளிவாக…
http://spl.nellaitamil.com/tamil/?p=14
2 comments:
சூப்பர் டூப்பர் கவித சார். குனாவுல கமல் எளுதுர மாரி
பதிவர்களின் சங்கமம் கிட்ட தமிழ்மனம் லிங்க் குடுக்க மாட்டேனுருக்கீரு?பொறவு எதுக்கு ஒன்க கவிதகீழ டாக்கா தமிழ்மணம் போடுரீக.
கமல் ரேஞ்சுக்கு பாராட்டியதற்கு நன்றி சிவகொமாரு...
Post a Comment