சில்க் சுமிதா, ஷகிலா… என்று எத்தனை பேர் தமிழக சினிமாவில் இளசுகளை ஆட்டிப்படைத்து கொடுங்கோல் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் நம்ம நமீதா போட்டியிட்ட மறு நிமிஷமே… பாபிலோனா மாதிரி எத்தனை பேருக்கு டெபாசிட் கூட கெடைக்காமல் போயிருக்குன்னு தெரியுமா?
அது ஒரு காலம்… அவங்க ஆட்சியில இருக்கும் போது தான் லிட்டர் லிட்டரா ஜொள்ளு, ஆறு மாதிரி ஓடிச்சி… அவங்க ஆட்சியில எப்பய்யா மின் வெட்டெல்லாம் இருந்துச்சி? நமீதா கண்ணை சொருகினாலே… ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.
ஒரு விஷயத்தை நீங்க யோசிச்சு பாக்கனும்… எத்தனை பொண்ணுங்களோட மானத்தை அவங்க காப்பாத்தியிருக்காங்க தெரியுமா? ஓட்டல் கட்டுறார்… ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டுறார்னு உங்க பாட்டுக்கு அடுக்குறீங்களே… என்னிக்காவது சேலை கட்டியிருக்காங்களா? மாட்டாங்க… ஏன் தெரியுமா?
அவங்களும் காந்தியடிகள் மாதிரி…. வீதியில ஒருத்தருக்கு சட்டையில்லங்கிறதை பாத்து சட்டையே போடாம தியாகம் செஞ்சார் காந்தி…. தான் மட்டும் சேலைகளை வாரிக்குவிச்சா, ஏழைகள் சேலைக்கு எங்கே போவார்கள்? அப்படிங்கிற சிந்தனையும் அவங்க கிட்ட இருந்துச்சு.
ஹாய் மச்சான்ஸ்ன்னு மானாட மயிலாட நிகழ்ச்சியில ஒவ்வொரு தடவையும் அவங்க சொல்லும் போது, எங்கள் இதயத்தின் நிரந்தர முதல்வரே நீங்கதான்னு முடிவெடுத்திருக்கோம். அவங்களுக்காக கோயில் கட்ட முடிவெடுத்த ஒருத்தர் இப்போ உங்களில் ஒரு வலைப்பதிவராக இருக்கிறார்.
இதன் தொடர்ச்சி... இங்கே
3 comments:
ஒங்க பின்னோட்டமே வேண்டாம் சாமி...
Post a Comment