Monday, September 22, 2008

வெடிவேலு - வி.காந்தன் - கலைஞன் சந்திப்பு

இடம் : வஞ்சிக்"கோட்டை"

வெடிவேலு நன்றாக குடித்துவிட்டு ஓலைப்பாயை விரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்தப்பக்கமாக வருகிறார் வி.காந்த்.

வெடிவேலு : அண்ணே.... இந்த பாயை கொஞ்சம் விரிச்சு கொடுங்கண்ணே... ஆயாசமா இருக்கு படுக்க முடியலை...

வி.காந்த் : அதெல்லாம் முடியாதுடா.. இது ஓலைப்பாய்...ஒன்னோட ரேஞ்சுக்கு லாரிக்கு போத்துற தார்பாய்தாண்டா லாயக்கு...

வெடிவேலு : ஆமா... நாங்க பாயையே பாத்ததில்ல வந்திட்டாரு... நொள்ளை சொல்றதுக்கு...(மெல்ல) போங்கய்யா உங்க வேலையை பாத்திட்டு...

வி.காந்த் : என்னடா சொல்ற...

வெடிவேலு : போங்கன்னன்னு தான்ணே சொன்னேன்...

வி.காந்த் : டேய் இந்த பாயை பத்தி உனக்கு என்னடா தெரியும்.. ஓலைப்பாயை தூத்துக்குடி பக்கம் தயாரிக்கிறாங்கடா... ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பாய் தயாராகுது... அதை வச்சு 140 குடும்பம் உசிர் வாழுது... ஒரு குடும்பத்துக்கு மூணு பேர் மேனிக்கு போட்டாக்கூட 420 பேருக்கு இந்த பாய் சோறு போடுதுடா..

வெடிவேலு : அண்ணே தெரியாம கேட்டுட்டேன்.

வி.காந்த் : (பார்த்திபன் பாணியில்) தெரியாமலே இவ்வளவு கேட்டேன்னா, தெரிஞ்சு எவ்வளவு கேட்ப? அது சரி இந்த கைலியை கண்டுபிடிச்சது யாரு?

வெடிவேலு : தலையில் அடித்தபடி போங்கன்னே... வேலைய பாருங்கன்னே... வெட்டிப்பயட்ட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?

வி.காந்த் : என்னையாடா போங்கனு சொன்னே... என்று கத்தியவாரே பின்னங்கால் பிடறியில் தெறிக்க... உதைகள் விடுகிறார். இதை பார்த்ததும் வி.காந்தின் எடுபிடிகள் ஐந்தாறு பேரும் வெடிவேலுவை பின்னி எடுக்கிறார்கள்.

வெடிவேலு : ஒன்னு... ரெண்டு...

வி.காந்த் : என்னடா திருப்பி அடிக்கிற மாதிரி எண்ணுற?

வெடிவேலு : இல்ல எவ்வளவு அடிச்சாலும் இந்த ஒடம்பு தாங்க வேண்டாமா? அதான் எத்தனை அடிவிழுந்துச்சுண்ணு எண்ணுறேன்.. அடிச்சிட்டிங்கல்ல... நீங்க போங்கன்னே...

வி.காந்த் : இப்போதைக்கு போறோம்... எனக்கு எப்ப மூடு வருதோ... அப்ப கூப்பிட்டு அனுப்புறேன்.. வந்து அடிவாங்கிட்டு போ... (சொல்லிவிட்டு வி.காந்த் திரும்பி விடுகிறார்)

வெடிவேலு அடிவாங்கிய களைப்பில் தூங்கி விடுகிறார். அப்போது வி.காந்தின் எடுபிடிகள் அவரது உள்ளாடை முதல் அத்தனை உடைகளையும் லவட்டிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

தார்பாயை சுத்தியபடியே ஊர் பெரிசான கலைஞனை போய் பார்க்கிறார். கலைஞன் முன்பு நாடகத்துக்கு வசனம் எழுதியவர். அந்த ஊரில் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்.

வெடிவேலு : அண்ணே... என்னைய பாருங்கண்ணே... இந்த ஓலைப்பாய் இல்லாட்டி ஊருல ஒரு நாய் விடாதுன்னே... இத்தனைக்கு காரணம் அந்த வி.காந்த் தான்னே...

கலைஞன் : அவன் பஞ்சாயத்து போடு எலெக்ஷன்ல நின்று வார்டுல ஜெயிச்சப்பவே நெனைச்சேன். இப்படி காவாலித்தனம் பண்ணுவான்னு... அலமேலு அந்த உடைவாளை எடு... அவனா நானா என்று பார்த்துடுறேன்...

வெடிவேலு : இதுக்கெல்லாம் நீங்க எதுக்குன்னே... ஒரு வார்த்த சொல்லுங்க நானே போய் அவனை பாத்துக்கிறேன்..

ஊர் பெரிசு கொடுத்த சப்போட்டு காரணமாக வி.காந்த்... வீட்டு முன்னால் நின்று...

ஏலே வி.காந்து... வெளியில வாலே...ஒன்டிக்கு ஒன்டி வாலே பாப்போம்... நீயா... நானா.... போட்டு பாப்போமா? வாடி வெளியே... கத்திக்கொண்டிருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வருகிறார்.

ஏண்டா வெடிவேலு... வி.காந்த் சந்தைக்கு போயிருக்காண்டா... அப்புறம் வந்து உம்பஞ்சாயத்தை வச்சுக்கோடா

வெடிவேலு : இது எங்களுக்கு தெரியாதாக்கும்? நாங்களெல்லாம் ராவாவே ரவுடிடா என்று விஷயத்தை சொன்னவர் நெற்றியில் தனது உள்ளங்கையாய் ஒரு தட்டு தட்டி விட்டு செல்கிறார்..



(குறிப்பு : இந்த கதைக்கும் திரு.விஜயகாந்த்-வடிவேலு பிரச்சனைக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை உறுதியளிக்கிறோம்)
nellaitamil

No comments: