Tuesday, September 2, 2008

ஏப்.14 முதல் கேப்டன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

"எல்லா கரைவேட்டிகளும் ஆளுக்கொரு டிவி சேனல் வைத்திருக்கும் போது நமக்கு மட்டும் ஒரு சேனல் இருந்தா நல்லாயிருக்கும் தலீவா" - தேமுதிகவின் தலைமை அலுவலகம் முதல் பஞ்சாயத்து கிளைகள் வரையில் தொண்டர்களின் நீண்ட நாள் ஏக்கத்துக்கு விடை கொடுக்க போகிறார் கேப்டன் விஜயகாந்த்.

கேப்டன் டிவி என்ற பெயரில் வரும் ஏப்.14 முதல் உலகெங்கும் இந்த டிவி முறைப்படி ஒளிபரப்பை துவங்கும் என்று சூளுரைத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

இப்போது சன் டிவியின் தயவினால் தனது அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுள்ள வி.காந்த் இந்த டிவியை முழுக்க முழுக்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதற்கும் தயாராகி வருகிறார்.

வழக்கமான சினிமா தனமான நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை அதிகார தரப்பின் முன்வைக்கும் ஊடகமாகவே கேப்டன் டிவி செயல்படும் என்கிறார் பிரேமலதா. இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது...

கேப்டன் டிவி துவங்குவது தொடர்பாக தேமுதிக தொண்டர்கள் நீண்டநாட்களாகவே அவரை வலியுறுத்தி வந்தனர். இது கட்சி சார்பில் துவங்கப்பட உள்ளது. ஏப்.14 ம்தேதி முறைப்படி ஒளிபரப்பை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட தேவைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் பணியில் கேப்டன் டிவி எப்போதும் ஈடுபடும். அது தேமுதிக உறுப்பினர் தொகுதியில் உள்ள குறைபாடாக இருந்தாலும் நேர்மையாக சுட்டிக்காட்டும் பணியில் கேப்டன் டிவி ஈடுபடும் என்றார்.

சேனல் டிப்ஸ்
மக்கள் டிவியும் இதே பணியில் ஈடுபட்டுள்ளதே... எத்தனை பேர் அந்த சேனலை பார்க்கிறாங்க மேடம்?
மானாட மயிலாட மாதிரி தேசபற்று நிகழ்ச்சி எல்லாம் கொடுப்பீங்களா

1 comment:

கிரி said...

வாங்க கேப்டன் கலக்குங்க :-)