செப்டம்பர் -3 விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் எல்லாம் வழக்கம் போல் ஒரு மணிநேரம் பக்தி பஜனை செய்து விட்டு சினிமா நாயகிகளின் பேட்டிகளும், திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.
இதற்கு விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் என்று ஆர்ப்பாட்டமாய் விளம்பரம் வேறு. ஜெயா டிவி, இமயம் டிவி, மெகாடிவி உள்ளிட்ட அனைத்து சானல்களிலும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தமிழ்திரையுலகில் முதல் முறையாக என்கிற ரேஞ்சில்.... விளம்பர ஒளிபரப்பு தொடர்கிறது.
ஆனால் கலைஞர் டிவியில் செப்.3 விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் கலைஞர் தானாம். பிள்ளையார் பிடிக்க குரங்காய் போயிடப்போகுது. பேசாம விடுமுறை தினம்னே சொல்லிடுங்கன்னு சேனல் நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டாராம். இப்போது அதையே கடைபிடிக்கிறாங்க...
No comments:
Post a Comment