Sunday, September 28, 2008

காதலில் விழுந்தேன் படத்துக்கு ஆஸ்கார் விருது

தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பவரும் காதலின் விழுந்தேன் திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளது. இந்த விருது பெற்ற இப்பட கதாநாயகன் நகுலன் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு நாக்க முக்க என்ற பெயரையே வைக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் திரைப்படத்தை தடுக்க நினைப்பது சூரியனை கையால் மறைப்பது போல ஆகும் என்று சம்மந்தப்பட்ட டிவி சேனல்கள் கொக்கரித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இப்படி ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது அக்குழுமத்தை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தான் தயாரிக்கும் புதிய படங்கள் சிலவற்றில் நகுலனே நாயகன் என்று அறிவித்துள்ளது மூன் பிச்சர்ஸ் நிறுவனம்.

தொடர்ச்சி...

http://spl.nellaitamil.com/tamil/?p=63

Saturday, September 27, 2008

அழகான அம்மா

அழகான அம்மாவை

இப்போதெல்லாம்

யாருக்கும் பிடிக்கவில்லை

பெண்பார்க்கும்

படலத்தில்

முதல் ரவுண்டில்

வென்றாராம் அம்மா!

இப்போதெல்லாம்

யாருக்கும் பிடிக்கவில்லை

அம்மாவின் முகத்தில்

லட்சுமியே

குடியிருக்கிறார்ரென

ராமானுஜம் ஐயர்

அடிக்கடி சொல்வாராம்

-இப்பொதெல்லாம்

யாருக்கும் பிடிக்கவில்லை.

அம்மாவை பார்த்து

போன காரியம்

சுபமென சொன்னவர்கள்….

இப்போது

மூழி வருகிறாள்

காரியம் வெளங்காது

என்கிறார்கள்.

இப்போதெல்லாம்

யாருக்கும் பிடிக்கவில்லை

ஆனாலும்

அம்மாவின் அழகு

மட்டுமே என்

கண் முன் நிற்கிறது….

அவளின்

முகத்தில் தெரியும்

ரேகையை போல தெளிவாக…

http://spl.nellaitamil.com/tamil/?p=14

Wednesday, September 24, 2008

இதயத்தை திருடியவன் ஹிதேந்திரன்

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளேயே அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. பால் மணம் மாறாத 16 வயதினிலே ஹிதேந்திரன் விட்டுச்சென்ற இதயம் இந்த நேரம் ஒரு குழந்தையின் நெஞ்சுக்குழிக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். இந்த செய்தியை தினகரன் நாளிதழில் படித்தபோது நெஞ்சம் கொஞ்சம் கணத்துப்போனது.

இந்த நேரத்தில் எல்லோருடைய இதயத்தையும் கொள்ளை கொண்டவர்கள் ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி தான். ஒரு தாய் எப்போது மகிழ்ச்சி அடைவாள் என்றால்... பிறர் தன் மகனை சான்றோன் என்று கூறும் போது தான். ஆனால் இந்த கலி காலத்தில் சான்றோன் என்ற சொல்லே கடலில் கரைத்த பெருங்காயமாய் மறைந்து போனது. இப்போது வாழும் போது பிறர்க்கு உதவி செய்யும் மகான்களை விட சாகும் போதும் இந்த உலகிற்கு எதையாவது விட்டுச்செல்லும் மனதர்கள் மேலானவர்கள்.

உதவி என்பது எல்லா காலத்திலும் எல்லாராலும் செய்யமுடியாது. அதைவிட இதயத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. குறிப்பாக சராசரி மனிதர்கள் மரணப்படுக்கையில் தன் உறவினர் இருந்தாலும் கூட அவரை கடைசி நிமிடம் வரை பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஹிதேந்திரனின் பெற்றோர் தன் மகன் மூளை செயல் இழந்து விட்ட நிலையில் இன்னொரு உடலில் அவன் இதயமாவது துடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களே.... அவர்களை போன்ற மனிதர்கள் ஊருக்கு நாலு பேராவது வேண்டும். சிறுநீரகங்கள்.... கண்கள், நுரையீரல், கல்லீரல் என அத்தனை உடலுறுப்புகளையும் பிறருக்கு வழங்கியது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பகவத்கீதையை நம்புகிறோமோ இல்லையோ அதில் கூறப்பட்ட வாசகம் உண்மையானது. எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு? இழப்புக்கள் ஒரு புறம் இருந்தாலும் எதையாவது விட்டுச்செல்வோம். ஹித்தேந்திரனை போல இதயத்தை கொடுக்க முடியாவிட்டாலும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முன்வருவோம். அது இறப்பிற்கு உங்களை உலகத்தை பார்க்க வைக்கும். ஒரு சொட்டு குருதியை பிறருக்கு அளித்தாலும் உங்கள் ரத்தம் ஓடும் மனிதர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் வாழ்த்துவார்கள்.

இருக்கும் போது
ரத்த தானம் செய்வோம்
இறந்த பின்
உடல்தானம் செய்வோம்
nellaitamil

Monday, September 22, 2008

தேசிய கொடி எரிப்பு - இது இந்தியா தானா?


இந்த படம் எங்களது யாகூ மெயிலில் வந்த போது கொஞ்சம் ரத்தம் சூடேறியது. எப்படி முடிகிறது இவர்களால்.... இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இந்திய உணவு... இந்திய சுகம்... இந்திய காற்றை சுமந்து கொண்டு வாழும் இவர்களும் இந்தியர்தானே... அப்புறம் ஏன் இந்த கொடி எரிப்பு போராட்டம்?
nellaitamil

வெடிவேலு - வி.காந்தன் - கலைஞன் சந்திப்பு

இடம் : வஞ்சிக்"கோட்டை"

வெடிவேலு நன்றாக குடித்துவிட்டு ஓலைப்பாயை விரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்தப்பக்கமாக வருகிறார் வி.காந்த்.

வெடிவேலு : அண்ணே.... இந்த பாயை கொஞ்சம் விரிச்சு கொடுங்கண்ணே... ஆயாசமா இருக்கு படுக்க முடியலை...

வி.காந்த் : அதெல்லாம் முடியாதுடா.. இது ஓலைப்பாய்...ஒன்னோட ரேஞ்சுக்கு லாரிக்கு போத்துற தார்பாய்தாண்டா லாயக்கு...

வெடிவேலு : ஆமா... நாங்க பாயையே பாத்ததில்ல வந்திட்டாரு... நொள்ளை சொல்றதுக்கு...(மெல்ல) போங்கய்யா உங்க வேலையை பாத்திட்டு...

வி.காந்த் : என்னடா சொல்ற...

வெடிவேலு : போங்கன்னன்னு தான்ணே சொன்னேன்...

வி.காந்த் : டேய் இந்த பாயை பத்தி உனக்கு என்னடா தெரியும்.. ஓலைப்பாயை தூத்துக்குடி பக்கம் தயாரிக்கிறாங்கடா... ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பாய் தயாராகுது... அதை வச்சு 140 குடும்பம் உசிர் வாழுது... ஒரு குடும்பத்துக்கு மூணு பேர் மேனிக்கு போட்டாக்கூட 420 பேருக்கு இந்த பாய் சோறு போடுதுடா..

வெடிவேலு : அண்ணே தெரியாம கேட்டுட்டேன்.

வி.காந்த் : (பார்த்திபன் பாணியில்) தெரியாமலே இவ்வளவு கேட்டேன்னா, தெரிஞ்சு எவ்வளவு கேட்ப? அது சரி இந்த கைலியை கண்டுபிடிச்சது யாரு?

வெடிவேலு : தலையில் அடித்தபடி போங்கன்னே... வேலைய பாருங்கன்னே... வெட்டிப்பயட்ட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?

வி.காந்த் : என்னையாடா போங்கனு சொன்னே... என்று கத்தியவாரே பின்னங்கால் பிடறியில் தெறிக்க... உதைகள் விடுகிறார். இதை பார்த்ததும் வி.காந்தின் எடுபிடிகள் ஐந்தாறு பேரும் வெடிவேலுவை பின்னி எடுக்கிறார்கள்.

வெடிவேலு : ஒன்னு... ரெண்டு...

வி.காந்த் : என்னடா திருப்பி அடிக்கிற மாதிரி எண்ணுற?

வெடிவேலு : இல்ல எவ்வளவு அடிச்சாலும் இந்த ஒடம்பு தாங்க வேண்டாமா? அதான் எத்தனை அடிவிழுந்துச்சுண்ணு எண்ணுறேன்.. அடிச்சிட்டிங்கல்ல... நீங்க போங்கன்னே...

வி.காந்த் : இப்போதைக்கு போறோம்... எனக்கு எப்ப மூடு வருதோ... அப்ப கூப்பிட்டு அனுப்புறேன்.. வந்து அடிவாங்கிட்டு போ... (சொல்லிவிட்டு வி.காந்த் திரும்பி விடுகிறார்)

வெடிவேலு அடிவாங்கிய களைப்பில் தூங்கி விடுகிறார். அப்போது வி.காந்தின் எடுபிடிகள் அவரது உள்ளாடை முதல் அத்தனை உடைகளையும் லவட்டிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

தார்பாயை சுத்தியபடியே ஊர் பெரிசான கலைஞனை போய் பார்க்கிறார். கலைஞன் முன்பு நாடகத்துக்கு வசனம் எழுதியவர். அந்த ஊரில் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்.

வெடிவேலு : அண்ணே... என்னைய பாருங்கண்ணே... இந்த ஓலைப்பாய் இல்லாட்டி ஊருல ஒரு நாய் விடாதுன்னே... இத்தனைக்கு காரணம் அந்த வி.காந்த் தான்னே...

கலைஞன் : அவன் பஞ்சாயத்து போடு எலெக்ஷன்ல நின்று வார்டுல ஜெயிச்சப்பவே நெனைச்சேன். இப்படி காவாலித்தனம் பண்ணுவான்னு... அலமேலு அந்த உடைவாளை எடு... அவனா நானா என்று பார்த்துடுறேன்...

வெடிவேலு : இதுக்கெல்லாம் நீங்க எதுக்குன்னே... ஒரு வார்த்த சொல்லுங்க நானே போய் அவனை பாத்துக்கிறேன்..

ஊர் பெரிசு கொடுத்த சப்போட்டு காரணமாக வி.காந்த்... வீட்டு முன்னால் நின்று...

ஏலே வி.காந்து... வெளியில வாலே...ஒன்டிக்கு ஒன்டி வாலே பாப்போம்... நீயா... நானா.... போட்டு பாப்போமா? வாடி வெளியே... கத்திக்கொண்டிருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் வருகிறார்.

ஏண்டா வெடிவேலு... வி.காந்த் சந்தைக்கு போயிருக்காண்டா... அப்புறம் வந்து உம்பஞ்சாயத்தை வச்சுக்கோடா

வெடிவேலு : இது எங்களுக்கு தெரியாதாக்கும்? நாங்களெல்லாம் ராவாவே ரவுடிடா என்று விஷயத்தை சொன்னவர் நெற்றியில் தனது உள்ளங்கையாய் ஒரு தட்டு தட்டி விட்டு செல்கிறார்..



(குறிப்பு : இந்த கதைக்கும் திரு.விஜயகாந்த்-வடிவேலு பிரச்சனைக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை உறுதியளிக்கிறோம்)
nellaitamil

Sunday, September 21, 2008

கோணலாய் ஒரு கவிதை

வீணையின்
கோணலில்
சங்கீதம்
சுரக்கும்!

நாணலின்
கோணலின்
நதிக்கரை
மிளிரும்!

நிலவின்
கோணலிலும்
இரவுகள்
ஒளிரும்!

அன்பே
நீமட்டும்
மனம் கோணாதே
என்
இதயம் நிமிராது
nellaitamil

Saturday, September 6, 2008

நெல்லை தமிழ் - கவிதை போட்டி



இந்த படத்திற்கு பொருத்தமான கவிதை ஒன்றை தட்டி விடுங்கள். கவிதைகளை உங்கள் இஷ்டத்திற்கு தட்டி விடலாம். கவிதைகளின் முடிவில் உங்கள் தளத்தின் சுட்டியை இணைத்தும் அனுப்பலாம். கவிதைகள் நெல்லை தமிழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்

சன் தொலைக்காட்சியின் நகைச்சுவை சேனல்

உலக தமிழர்கள் மத்தியில் தொலைக்காட்சி என்றாலே சன் நெட்வொர்க் என்று தனி முத்திரை பெற்றுள்ள சன் குழுமத்தில் இருந்து மேலும் ஒரு சேனல் வெளிவருகிறது. நகைச்சவைக்கென்றே துவங்கப்பட்டுள்ள இந்த சேனலில் 24 மணி நேரமும் நகைச்சுவை தொடர்பான நிகழ்ச்சிகளே ஒளிபரப்ப பட உள்ளன.

இந்த சேனல் திங்கள் முதல் துவங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த சேனலில் அசத்தப்போவது யாரு இயக்குனருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேனலின் வருகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் இடம் பெற்று வந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு பதிலாக மாற்று நிகழ்ச்சிகள் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Tuesday, September 2, 2008

ஏப்.14 முதல் கேப்டன் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

"எல்லா கரைவேட்டிகளும் ஆளுக்கொரு டிவி சேனல் வைத்திருக்கும் போது நமக்கு மட்டும் ஒரு சேனல் இருந்தா நல்லாயிருக்கும் தலீவா" - தேமுதிகவின் தலைமை அலுவலகம் முதல் பஞ்சாயத்து கிளைகள் வரையில் தொண்டர்களின் நீண்ட நாள் ஏக்கத்துக்கு விடை கொடுக்க போகிறார் கேப்டன் விஜயகாந்த்.

கேப்டன் டிவி என்ற பெயரில் வரும் ஏப்.14 முதல் உலகெங்கும் இந்த டிவி முறைப்படி ஒளிபரப்பை துவங்கும் என்று சூளுரைத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

இப்போது சன் டிவியின் தயவினால் தனது அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுள்ள வி.காந்த் இந்த டிவியை முழுக்க முழுக்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதற்கும் தயாராகி வருகிறார்.

வழக்கமான சினிமா தனமான நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை அதிகார தரப்பின் முன்வைக்கும் ஊடகமாகவே கேப்டன் டிவி செயல்படும் என்கிறார் பிரேமலதா. இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது...

கேப்டன் டிவி துவங்குவது தொடர்பாக தேமுதிக தொண்டர்கள் நீண்டநாட்களாகவே அவரை வலியுறுத்தி வந்தனர். இது கட்சி சார்பில் துவங்கப்பட உள்ளது. ஏப்.14 ம்தேதி முறைப்படி ஒளிபரப்பை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட தேவைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் பணியில் கேப்டன் டிவி எப்போதும் ஈடுபடும். அது தேமுதிக உறுப்பினர் தொகுதியில் உள்ள குறைபாடாக இருந்தாலும் நேர்மையாக சுட்டிக்காட்டும் பணியில் கேப்டன் டிவி ஈடுபடும் என்றார்.

சேனல் டிப்ஸ்
மக்கள் டிவியும் இதே பணியில் ஈடுபட்டுள்ளதே... எத்தனை பேர் அந்த சேனலை பார்க்கிறாங்க மேடம்?
மானாட மயிலாட மாதிரி தேசபற்று நிகழ்ச்சி எல்லாம் கொடுப்பீங்களா