நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 10.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை அசைந்ததாக பூகம்பத்தை உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அந்தமான் தீவுப் பகுதியில் நேற்று இரவு பத்தரை மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவே சென்னையிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தமான் பூகம்பத்தின் அளவு 6.9 ரிக்டராக தெரிய வந்துள்ளது.
சென்னையில் உணரப்பட்ட பூகம்பம் வெறும் 3 விநாடிகள்தான் நீடித்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்திலும் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். சென்னை நகரின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டாலும் கூட இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.
சென்னையைப் போலவே புவனேஸ்வர், கட்டாக் ஆகிய நகரங்களிலும் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். இங்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment