முதலை மீது ஏறி்
சவாரி செய்பவன்
முள் குத்தியதற்கு
வருந்துவானா?
கடலை அளக்க
கால்களை விரித்தவனை
அலைகளின் முத்தங்கள்
என்ன செய்து விடும்?
சிங்கத்தின் குகைகள்
சிலிர்ந்து நிற்பவன்
சிலந்தியைக் கண்டு
அச்சம் கொள்வானா?
சிரமங்களின் வலியால் மட்டுமே
சிகரங்களின் வழி தெரியும்.
உள்ளத்தின் காயங்களே
வெற்றியின் உயரத்தைக் காட்டும்
கருவறையும் இருட்டறை
கல்லறையும் இருட்டறை
இடைப்பட்ட காலத்தில் மட்டும்
இருட்டறை கண்டு பயம் ஏனோ?
காலத்தின் கரங்களில்
நீ சிக்கினால்
வெற்றியின் தூரம்
வெகுதூரம்.
காலம்
உனது கரங்களுக்குள் சிக்கினால்
தோல்வியின் தூரம் தொலைதூரம்.
கலங்காதே கண்மணியே...
நம்பிக்கை கால்களின் கீழே
கவலைகள் என்றும் கால் தூசி.
மனதில் நம்பிக்கை உறுதிகொண்டால்
மரணம்கூட மண்டியிட்டு நிற்கும்.
யாரோ எழுதிய கவிதை
No comments:
Post a Comment