Friday, March 5, 2010
ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? இஸ்ரோவின் கிரையோஜெனிக் சோதனை வெற்றி
இஸ்ரோவின் கிரையோஜெனிக் சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக நெல்லை மகேந்திரகிரியில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நெல்லை மகேந்திரகிரியில் செய்தியாளர்களிடம் கே.ராதா கிருஷ்ணன் தெரிவித்த கருத்தின் சாரம்...
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் இஸ்ரோ அமைப்பின் "திரவ திட்ட இயக்க மையம்' உள்ளது. ராக்கெட்டின் விண்ணில் செலுத்த பயன்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரஷ்யா தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தியுள்ளது. தற்போது இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள், ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் விரைவில் விண்ணில் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பயன்படும் கிரையோஜெனிக் சோதனை முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது. கிரையோஜெனிக் இன்ஜின்150 வினாடிகளுக்கான சோதனை வெற்றிகரமாக நடந்தது. 500 பாராமீட்டர் அளவில் நடந்த சோதனையில் ஒரு இடத்தில் மட்டும் தடுமாற்றம் ஏற்பட்டது. அண்மையில் ஸ்ரீஹரிகோட்டாவில் 200 வினாடிகளுக்கான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மகேந்திரகிரியிலும் அடுத்து 200 வினாடிக்கான சோதனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
கோப்பு படம்
செய்தி தகவல் திரு.அறிவரசு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment