Tuesday, March 2, 2010

சாமியார்களுக்கு இலவச திருமணம் - தமிழக அரசு

பரோடா மார்ச் 4. சாமியார்களின் சல்லாபத்தை அடக்க தமிழக அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி சாமியார்கள் அனைவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பல்வேறு இடங்களில் குட்டி ஆஸ்ரமம் முதல், வெளிநாட்டு கரன்சிகளை கறந்து, 300 ஏக்கரில் மடம் அமைத்துள்ளவர்கள் வரையில் கடந்த காலங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது குறித்து, கழகத்தின் வாரிசு அமைச்சர் ||||||||||| தமிழக அரசின் பார்வைக்கு எடுத்து வைத்தார்.

இதையடு்த்து அரசின் ஆலோசனைக்கு பின் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...

1, மடம் மற்றும் ஆஸ்ரமம் வைத்துள்ளவர்கள் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2, பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில், ஆஸ்ரமத்தில் உள்ள இளம் பெண் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்கள் இதற்கு முன் செய்த தொழில், அறைகளின் எண்ணிக்கை, சாடிலைட் டிவி வசதி உள்ளதா... இண்டர்நெட், காமிரா வசதிகள் உள்ளதா என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

3, சாமியார்களுக்கு நாள்தோறும் இரவில் செய்துகொள்ளும் திருமணங்களை தமிழக அரசு சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாது.

4, சாமியார்களும் சராசரி மனிதர்களே என்பததை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும். (இத்திட்டம் 55 வயதுக்குட்டவட்டவர்களுக்கு மட்டும்)

5, இளஞ்சாமியார் மறுமணத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் சாமியார்கள், ஏற்கனவே திருமணம் செய்து மனைவியை பிரிந்து ஆஸ்ரமத்தில் தஞ்சம் அடைந்திருப்பின் அவர்களுக்கு எளிய முறையில் விவாகரத்தும், மறுமணமும் செய்து வைக்கப்படும்.

6, விண்ணப்பிக்கும் சாமியார்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட சல்லாப வீடியோவை கட்டாயம் இணைக்கவும். இது, கழக குடும்பத்தின் தொலைக்காட்சியில் தொடராக விரைவில் வெளிவர உள்ளது.

7, இலவச திருமணம் செய்துகொள்ளும் சாமியார்கள் விண்ணப்ப பாரத்தின் 18 (அ) வில் குறிப்பிட்டுள்ள படி பாசத்தலைவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியை தங்களது சொந்த செலவில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


(இந்த செய்தி கற்பனையா புனையப்பட்டது)

1 comment:

சந்திர கிருஷ்ணா said...

சரி நக்கல் தலைவா