Tuesday, March 30, 2010

அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது - கழுதை தேய்ந்து கட்டெரும்பானது

பென்னாகரம் இடைத்தேர்தல் இறுதி்ச்சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பதிவான மொத்த ஓட்டுக்களில் 6 ல் ஒரு பங்கு கிடைக்காத அ.தி.மு., க மற்றும் தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டு இழந்தனர். 18 வது கடைசி சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் பா.ம.க., வேட்பாளரை விட 36 ஆயிரத்து 384ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 669 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 41 ஆயிரத்து 285 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 26 ஆயிரத்து 787 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 11 ஆயிரத்து 406 ஓட்டுக்களும் பெற்றனர்.



ஒரளவு ஓட்டுக்கள் பெற்று வந்தாலும் அ.தி.மு.,வின் டெபாசிட் காலியாகும் என அ.தி.மு.க., தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் அ.தி.மு.க., டெபாசிட் கிடைக்குமா என அக்கட்சி தொண்டர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபடி இருந்தனர். இத்தொகுதியில் பா.ம.க., வின் வன்னியர்கள் ஓட்டு பலம் சற்று கூடுதலாக உள்ளதே இதற்கு காரணம்.

தபால் ஓட்டில் தி.மு.க., முந்தியது : முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டில் தி.மு.க.,வுக்கு 32 ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 3 ஓட்டுக்களும், பா.ம.க.,வுக்கு 2 ஓட்டுக்களும் கிடைத்தன. ஓட்டுக்கள் எண்ண துவங்கியதும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சுற்று வாரியாக விவரங்களை அறிவிக்கவில்லை. சற்று காலதாமதம் செய்தனர். அவசரப்படாமல் தெளிவாக எண்ணப்பட்டு டேலி ஆனவுடன் அறிவிப்போம் என்றனர். இதனால் அங்கு இருக்கும் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க, தலைவருமான கருணாநிதி கூறியிருப்பதாவது: இந்த வெற்றி தி.மு.க., அரசின் சாதனை பயணத்திற்கு தூண்டுகோலாக அமையும். வன்முறைக்கு இடம் தராமல் ஜனநாயக முறையில் பணியாற்றியதால் வெற்றி கிட்டியுள்ளது. வெற்றிக்காக உழைத்த அனைத்து பிரிவினருக்கும் தமது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். முன்னதாக தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு லட்டு வழங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இந்த வெற்றி குறித்து காங்., தலைவர் தங்கபாலு கூறுகையில் மத்திய , மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த பொன்னாரமாக வெற்றி அமைந்துள்ளது. என கூறியுள்ளார்.

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே நடந்து முடிந்த திருமங்கலம். வந்தவாசி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தி.மு.க., தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்பசேகரன் எம்.எல்.ஏ.,வானார்.

No comments: