என் மாமா பாலசுப்பிரமணியம் நேத்திக்கு நைட்டே கதர்ஸ்டோர் விஷயமா திருநெல்வேலிக்கு போயிட்டார். நைட் வர லேட்டாகும்னு தெரிஞ்சதால அத்தை மட்டும் தான் வீட்டில்... கூடவே, அவங்க இரண்டு பொண்ணுங்களும், பையன் ரமேஷூம் மட்டும் தான் இருந்தாங்க...
இன்னிக்கு காலையில் பிளஸ்டு ரிசல்ட் வரும் காலையில் வீட்டுக்கு வரனும்... எப்படியும் நெல்லை டிஸ்டிக்கில் எம்பையன் பர்ஸ்ட் ரேங்க் எடுப்பான் என்று கிளம்பும் போதே என்னிடம் சொன்னார்.
இன்னிக்கு காலையில், ரமேஷ் என்னிடம், அத்தான், நீங்க தான் ரிப்போர்ட்டர் ஆச்சே... உங்க செல்வாக்கை பயன்படுத்தி என்னோட ரிசல்டை பாருங்களேன் என்று சொல்லிக்கொண்டுருந்தான். காலையில் 9 மணிக்கு நான் தற்செயலாய் கலைஞர் டிவியை போட்டேன். அதில் தென்காசி பாரத் மாண்டிச்சேரி மாணவர் ரமேஷ் மாநிலத்திலேலே முதலிடம் என்ற பிளாஸ் நியூஸ்....
எனக்கு கையும் ஓடலை... காலும் ஓடலை... அவனை கூப்பிட்டேன். டேய் ரமேஷ் இங்க வாடான்னு... தொலைக்காட்சியை காட்டினேன். அவன் பார்த்து விட்டு சர்வசாதாதரணாய் போனான்.
இப்ப பாருங்க என் ஸ்கூலில் இருந்து போன் வரும்னான்... அவன் சொன்ன மாதிரியே பாரத் மாண்டிச்சோரியில் இருந்து போன் வந்தது. பையனை கூட்டிகிட்டு உடனடியாக ஸ்கூலுக்கு வாங்க டிஒ பார்க்கனும்னு சொன்னார்னு பிரின்ஸ்பலே அத்தையிடம் சொன்னார்.
அவன் அப்போதும் கூட சிரிக்கவே இல்லை. பிரஸ் கான்பரன்சில என்னடா சொல்லப்போற... வழக்கம் போல கலெக்டர் கனவு தானா... என்றேன்.
நீங்க வாங்களேன் அத்தான்...
வேண்டாம் எனக்கு வேலையிருக்கு நீ போயிட்டு வா... நானாடா ஸ்டேட் பர்ஸ்ட் வந்திருக்கேன்.. நீ தானே... என்றேன்.
அத்தான்... நீங்க என்ன சொல்றீங்க... நீங்க கூட தமிழில் டிஸ்டிக் பர்ஸ்ட் எடுத்தவர் தானே... என்று மடக்கினான்.
இந்த நேரத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மாமாவிற்கு போன் போட்டேன். நீங்கள் அழைத்த எண் தற்போது சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது என்று பதில் வந்தது.
படிப்புக்காக பல தியாகங்கள்... இரவு 12 மணி வரையில் கூடவே இருந்த பாலசுப்பிரமணியன் மாமாவை இந்த நேரத்தில் கண்டிப்பாக ரமேஷ் நினைவு கூர்வான்.
7 மணிக்கு கதர்ஸ்டோர் (காதி வஸ்திராலயம்) போய்விட்டு வரும் பாலசுப்பிரமணியம் இரவு வரையில் ரமேசுடன் தான் இருப்பார். அவன் சப்தம் போட்டு படிப்பதில்லை. ஆனாலும் உடனிருந்து கடந்த 30 நாட்களாய் அதை படித்தாயா... இதை படித்தாயா என்று கேட்டுக்கொண்டிருப்பார்.
பள்ளியில் முதல்மாணவனாய் இருந்த ரமேஷூக்கு 10ம் வகுப்புக்கு பிறகு நடந்த சம்பவங்கள் தான் திருப்பு முனையாக அமைந்தது. இதைப்பற்றியெல்லாம் நாளை சொல்கிறேன்.
1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்
தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்
உன்னை நெல்லைத்தமிழ் இணையமும் வாழ்த்துகிறது.
புகைப்படங்கள் மற்றும் பிற செய்திகள் விரைவில் இணைக்கப்படும்.
43 comments:
தமிழில் ஸ்டேட் 1 எடுத்தவருக்கும், ரமேஷ்க்கும் வாழ்த்துகள்
//நீங்க கூட தமிழில் டிஸ்டிக் பர்ஸ்ட் எடுத்தவர் தானே..
சூ ப் ப ர் சா ர்.
வாழ்த்துக்கள் :-)
வாழ்த்துக்கள் :-))
வாழ்த்துக்கு நன்றி...
//நீங்க கூட தமிழில் டிஸ்டிக் பர்ஸ்ட் எடுத்தவர் தானே..
தமிழ்நெஞ்சம்... அதை நீக்கி விடுகிறேன். நான் இப்போ தமிழில் தடுமாறுகிறேன்.
கிரி, சென்ஷி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள்!
ரமேஷ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்....
நன்றி சந்தனமுல்லை
கண்ணா, பார்சாகுமாரன் நன்றி.
உங்க மாமா பையனுக்கும் அவுங்க பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்...
தீப்பெட்டி உங்க சார்பா நான் வாழ்த்து சொல்றேன்.
எவ்வளவு பெரிய சாதனை! நம்ம எல்லோரோட வாழ்த்துகளையும் அவருக்குச் சொல்லுங்கள். பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் கூட வாழ்த்துகள்.
நான், ஜஸ்ட் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டேட் பஸ்ட் வாய்ப்பைத் தவற விட்டது நினைவு வந்தது :)
அனுஜன்யா
மனமார்ந்த இனிய பாராட்டுகளும் மேற்படிப்புக்கான வாழ்த்து(க்)களும் ரமேஷுக்குச் சொன்னோமுன்னு சொல்லுங்க.
நான், ஜஸ்ட் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டேட் பஸ்ட் வாய்ப்பைத் தவற விட்டது நினைவு வந்தது :)
வாழ்த்தை சொல்றேன். ஆனா நீங்க சொல்ற இந்த அரசியல் எனக்கு புரியல...
நன்றி துளசிகோபால்.
வாழ்த்துகள், மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
உங்க மாமா பையனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லிடுங்க !!!
நன்றி கோவி.கண்ணன்.
நன்றி மகேஷ்
உங்க பதிவை படிக்கும் போது எங்க வீ ட்டு பிள்ளை ஸ்டேட் பஸ்த் எடுத்த மாதிரி ஒரு உணர்வு .வாழ்த்துகள் !!வாழ்த்துகள் !!
மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்க பதிவை படிக்கும் போது எங்க வீ ட்டு பிள்ளை ஸ்டேட் பஸ்த் எடுத்த மாதிரி ஒரு உணர்வு .வாழ்த்துகள் !!வாழ்த்துகள் !!
மலர், ரமேஷ் நம்ம வீட்டு பையன். வாழ்த்துக்கு நன்றி.
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் மிகச் சுமாரான மதிப்பெண்களுடன் பாஸ் செய்தது நினைவு வந்தது (மாநிலத்தில் எனக்கு மேலே குறைந்த பட்சம் ஒரு இலட்சம் பேர் இருந்திருப்பார்கள்) என்று சொல்ல வந்தேன். அரசியல் ஒன்றும் இல்லை.
அனுஜன்யா
தமிழில் ஸ்டேட் 1 எடுத்தவருக்கும், ரமேஷ்க்கும் வாழ்த்துகள்
நான் உங்கள் மின்னஞசல் கிடைக்காமல் உங்களை தொடர்பு கொள்ள இயவில்லை...
தயவு செய்து suresh.sci@gmail.com ஒரு மெயில் அனுப்புங்க .. பேசுவோம்
வாழ்த்துகள்...
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் மிகச் சுமாரான மதிப்பெண்களுடன் பாஸ் செய்தது நினைவு வந்தது.
அனுஜன்யா இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் சொன்னது சரிதான். நான் தான் சரியா புரிஞ்சுக்கலை.
ஜோ, சுரேஷ், டக்ளஸ் வாழ்த்துக்கு நன்றி.
சுரேஷ் என்னோட மெயில் ஐடியில் இருந்து உங்களுக்கு ஒரு மடல் போட்டிருக்கேன். பாருங்க..
ரமேசுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லுங்கள் அண்ணே
சொல்லியாச்சு... எல்லார் வாழ்த்தையும்...
வாவ்!
அருமையான செய்தி!
ரமேஷுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க!
நெல்லையெங்கும் பரவிய புகழ் அகிலமெங்கமும் பரவட்டும்!
ரமேஷ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடரட்டும் வெற்றிகள்.
///1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர்
தென்காசி பாரத் மாண்டீúஸôரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ரமேஷ்///
ரமேஷ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றி வால்பையன், ஜீவநதி.
ஒரே ஒரு மார்க்கில் ஸ்டேட் பர்ஸ்டை தவறவிட்டது மீண்டும் நினைவில் நிழலாடுகிறது
அந்த ஒரு மார்க் பின்னால் இல்ல முன்னால.
ரவியண்ணாச்சி வாங்க... வாழ்த்துக்கு நன்றி.
மாதேவி உங்களை கவனிக்கலை. வாழ்த்துக்கு நன்றி.
Congratulations to Mr.Ramesh and best wishes for a great future!!
Post a Comment