Saturday, May 2, 2009
மீண்டும் பாட வருகிறார் டிஎம்எஸ்
இசைக்கு வயதில்லை; தொடர்ந்து திரைப்படங்களில் பாடுவேன் என்று பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செüந்தர்ராஜன் கூறினார்.
எம்.ஜி.ஆர். நடித்த "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் கதையைத் தழுவி "வாலிபன் சுற்றும் உலகம்' என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.சிவா, மீனாட்சி, லதா, மனோரமா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பவர் ஏ.ஆர்.லலிதசாமி.
எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெற்ற கருத்தாழம் மிக்க பாடல்களைப் போலவே இந்தப் படத்திலும் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் இந்தப் படத்தில் வாலி, காமகோடியன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் டி.எம்.செüந்தர்ராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் டி.எம்.செüந்தர்ராஜன் பேசியதாவது:
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் என் முதல் பாடலைப் பாடியபோது எனக்கு வயது 24. அதன்பிறகு அவருடைய இசையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளேன். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடைய இசையில் பாடியிருக்கிறேன். என்னுடன் இணைந்து சுசீலாவும் பாடியுள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து பாட பல வாய்ப்புகள் வருகின்றன. இசை ஆல்பம் ஒன்றில் பாடுவதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்திருக்கிறார். இசைக்கு வயதில்லை; தொடர்ந்து பாடுவேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இசைக்கு வயதில்லை - டி.எம்.செüந்தர்ராஜன்
உண்மை
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகர் தொடர்ந்து பாடுவதாக எடுத்த முடிவு மகிழ்ச்சி தருகிறது.
மிகவும் மகிழ்ச்சிங்க
டிம்ஸ் பாடுரார்னு சொல்லி அப்பாகிட்ட பாக்கட் மணி இன்னிக்கு கலக்ட் பண்ணிடலாம்
Post a Comment