Tuesday, May 12, 2009

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்

ஒரு பொறியாளரும்... தத்துவஞானியும்... ஆற்றைக்கடக்க பரிசலில் போனார்கள்...

பரிசல் புறப்பட்டபோதே... பொறியாளர் பரிசல்காரனிடம் கேட்டார்...

"அதோ தெரிகிறதே அந்த அணையை யார் கட்டியது தெரியுமா..."


தெரியாது ஐயா - இது பரிசல்

"சரி விடுப்பா, அந்த அணையோட உயரம் தெரியுமா...."

பரிசலிடம் இருந்து மெளனம்.

கொஞ்சதூரம் சென்றிருப்பார்கள்...

தத்துவஞானி கேட்டார்...

"சாக்ரடீசை தெரியுமாப்பா"

தெரியாது ஐயா என்றான் பரிசல்..

அவர் எழுதின புத்தகம் ஏதாச்சும் படிச்சிருக்கியா...

இல்லை என்றான் பரிசல்..

பொறியாளரும் தத்துவஞானியும் தங்கள் அறிவுசார் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க,

பரிசல்காரன் ஒரே கேள்வி தான் கேட்டான்...

உங்களுக்கு நீந்த தெரியுமா... என்று...

தெரியாது என்று இருவரும் சொல்ல..

இப்போது படகில் ஓட்டை விழுந்து விட்டது. இருவரும் முடிந்தால் தப்பித்துக்கொள்ளுங்கள் என்றான் பரிசல்காரன்.

பதிவுலகில் எத்தனையோ அறிவுஜீவிகளுக்கு பரிசல்காரனாய் தெரிந்தவருக்கு இன்று பிறந்தநாள்.
பதிவுலகில் நீந்த தெரிந்ததோடு பலரை கரைசேர்த்த பெருமையும் இவருக்குண்டு. இவரது எழத்து திறன் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

இதுவரையில் சுமார் 292 பதிவுகளை பதியம் செய்துள்ள இவர் கடந்த 2008ம் ஆண்டில் எழுத துவங்கினார்.

2 லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் தொடப்போகும் பதிவர்களில் இவரும் ஒருவர். அவள் விகடன் மற்றும் ஜூனியர் விகனில் எழுதியுள்ள இவரின் சிறுகதை விரைவில் ஆனந்த விகடனிலும் வரப்போகிறது.

இவருக்கு இன்று பிறந்த நாள்...

நெல்லைத்தமிழ் இணையத்தின் ஆசிரியர் குழு மற்றும் சகபதிவர்கள் சார்பில் பரிசல்காரனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்றோம்.

பரிசல்காரனின் சுயவிபரம்
My Photo
Krishna Kumar K.B.
திருப்பூர், தமிழ்நாடு, India
நானெழுதுவது உங்களுக்குப் பிடிக்கவேண்டுமென நினைப்பதில்லை.. ஆனால் கண்டிப்பாய் படிக்கவேண்டுமென நினைப்பேன்! (ஏதாவது புரிஞ்சுதா?)
பரிசல்காரனின் முழுசுயவிபரம் இங்கே

பரிசல்காரனின் பழைய கவிதை

என்னிடம் பிடிக்காதது
ஏதுமிருந்தால் சொல்லுங்கள்’ என்கிறாய்.
பிடிக்காதது ஒன்றுமில்லாததாய்
நீ இருப்பதால்தானே
உன்னையே பிடித்தது!

இருந்தாலும்-
உன்னிடம் ‘பிடிக்கவில்லை’
என்று சொல்ல ஒன்றுண்டு.
இன்னும் நான் உன்னைக்
கட்டிப்
"பிடிக்கவில்லை!"
--------------------------------------
நான் வருத்தப்படும்போதெல்லாம்
நீ கோபப்படுகிறாய்..
நீ கோபப்படும்போதெல்லாம்
நான் வருத்தப்படுகிறேன்..
இதனால்தான் அன்பே..
நம்மை நெருங்க இயலாமல்
வருத்தங்கள் வருத்தப்படுகின்றன..
கோபங்கள் கோபப்படுகின்றன
.
--------------------------------------
என் சந்தோஷங்களின் போதெல்லாம்
நீ பக்கத்திலேயே இருக்க வேண்டும்
என்று நினைப்பேன்..
ஆனாலுமென்ன
நீ பக்கத்தில் இருக்கையிலெல்லாம்
நான் சந்தோஷமாய்த்தான்
இருக்கிறேன்.

-------------------------------------
கேட்டுக்கொண்டேயிருக்கிறாய்..
‘பண்டிகைக்குப் பரிசாய்
என்ன வேண்டும்’ என்று
என்ன தந்துவிடமுடியும் உன்னால்
ஏற்கனவே தந்த
உன் இதயத்தைவிட சிறந்ததாய்?
------------------------------------
பார்க்கப் பார்க்க சலிக்காதது
எதுவென்று கேட்டால்
கடல், ரயில்,யானை என்று
பலரும் பலதும் சொல்கிறார்கள்..
எவனும்
அவனவன் காதலியை
சரிவரப் பார்த்ததில்லை போலிருக்கிறது!

------------------------------------
எத்தனையோ பெண்கள்
காதலித்து
மனிதனை கவிஞனாக்கியதுண்டு.
ஆனால்-
ஏற்கனவே கவிஞனான என்னை
மனிதனாகவும் ஆக்கியவள்-நீ!
------------------------------------------------------
என்றும் அன்புடன்
வால்பையன்
ஆசிரியர் குழு.
நெல்லைத்தமிழ் இணையம்

No comments: