நெல்லைத்தமிழ் இணையம் திரட்டியாக மாற்றப்பட்ட பின் சுமார் 200 தமிழ் வலைப்பதிவர்கள் தங்களை இதில் இணைத்துக்கொண்டுள்ளனர். குருகிய காலத்தில் அதாவது சுமார் 2 மாதங்களுக்குள் நெல்லைத்தமிழ் திரட்டியில் பதிவர்களின் பங்களிப்பு மற்றும் இணைய பார்வையாளர்களின் வருகை ஆகியவை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இணைய பார்வையாளர்களின் வருகை ஒருபுறம் இருந்தாலும் இத்தனை வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது நீங்கள் தான்.
இந்த நேரத்தில் நெல்லைத்தமிழ் இணையத்தின் மீது பற்றுதலுடன் தங்களது பதிவுகளை இணைக்கும் பதிவர்கள், இனி இதில் இணையப்போகும் பதிவர்கள் ஆகிய அனைவருக்கும் எங்களது நன்றிகள்....
இதற்கு முக்கிய காரணம்...
நெல்லைத்தமிழின் மூன்றாவது ஆண்டு துவக்கம் இது...
சித்திரையில் துவங்கிய நெல்லைத்தமிழ் ஆரம்ப காலத்தில் திருநெல்வேலி மாவட்ட தகவல்களை மட்டுமே உள்ளடக்கிய தளமாக வெளிவந்தது...
அதன்பின்பு பல்வேறு செய்திகள், சினிமா தகவல்கள் போன்றவற்றுடன் பல்வேறு செய்திகளை தாங்கி வந்தது. நெல்லைத்தமிழின் அடுத்த கட்டமாக தற்போது புக்மார்க் தகவல்களை உள்ளடக்கும் விதமாக இது திரட்டி போன்று செயல்படுகிறது.
கடந்த காலங்களின் எங்களின் வளர்ச்சிக்கு வழி அமைத்து கொடுத்த பதிவர்கள், தமிழ்மணம் தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் எங்களின் நன்றிகள்...
கடந்த 2 ஆண்டுகளில் எங்களின் ஏற்ற தாழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட பதிவர்கள்... நண்பர்கள், இணைய பார்வையாளர்கள் என அனைவருக்கும் நன்றி.
5 comments:
நெல்லைத் தமிழ்த்திரட்டியின் பணி பாராட்டுக்குரியது
நன்றி முனைவர் இரா.குணசீலன் ஐயா
வாவ்!
மூன்றாம் ஆண்டா வாழ்த்துக்கள்!
மேலும் உங்கள் பணி சிறக்க!
நன்றி அருண்.
///நெல்லைத்தமிழின் மூன்றாவது ஆண்டு துவக்கம் இது...///
மேலும் உங்கள் பணி சிறக்க!வாழ்த்துக்கள்!
Post a Comment