கனாக் காணும் காலங்களில்' நான் இளமையான டீச்சர். "கல்யாணப் பரிசு'வில் நான் பாதி நல்லவள், பாதி கெட்டவள். "மேகலா'வில் இப்போ துதான் நான் கோதையாக எண்ட்ரியாகப் போகிறேன். இனிமேல்தான் அதில் என்னுடைய கெட்-அப் எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியும். ராஜ் டிவியில் ஏர்டெல் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். அவ்வப் போது மேடையில் பாடவும் செய்கிறேன்... எல்லாத்துக்கும் மேலாக பி.பி.ஏ. இரண் டாம் ஆண்டு படித்துக் கொண்டும் இருக்கிறேன். அடுத்து எம்.பி.ஏ. முடித்துவிட்டு அது தொடர்பான பெரிய பணியில் சேர வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக் கின்றது. பார்க்கலாம்...'' -இப்படிப் பேச ஆரம்பித்த பத்து வினாடியில், பட்டாம்பூச் சியாய் படபடக்கிறார் காவ்யா. மீடியாவில் நடிகையாகவும், தொகுப்பாளினியாக வும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் காவ்யா, இனி உங்களுடன்...
நான் ஆரம்பத்தில் ஒரு மேடைப்பாடகியாகத்தான் எல்லோருக்கும் அறிமுகமா னேன். சங்கர் கணேஷ், ஜோஸ்வா ஸ்ருதி, சிந்து பை ரவி, யு.கே. முரளி போன்றவர்க ளின் இசைக்குழுக்களில் பாடியிருக்கிறேன். இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறேன்.
நான் மேடைக் கச்சேரிகளில் பாடுவதைப் பார்த்து விண் டிவியில் ஒரு சிறிய நிகழ்ச் சியை தொகுத்தளிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் வெளிநாட்டில் ஒளிபரப்பாகும் தமிழ் சேனல்கள் சிலவற்றுக்காக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தேன். கடந்த வரு டத்தில் ஜெயா டிவியில் சுசித்ராவின் "ஸ்டார் உங்களுடன்' நிகழ்ச்சியை நான் தொகுத் தளித்தது, ரசிகர்களிடம் பரவலாக என்னை அறிமுகப்படுத்தியது.
விஜய் டிவியில் அப்போது வெளிவந்துக் கொண்டிருந்த "காத்து, கருப்பு' சீரியலில் நான் கதாநாயகியாக நடித்த கதை இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பாகியது. தமிழ்ச் சேனல்களில் என்னைப் பார்த்த உ டி.வி.நிறுவனத்தார், தெலுங்கில் ஒரு சீரியலில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். அந்த சீரியல் இப்போது முடிந்து விட்டது.
"காத்து, கருப்பு' சீரியலுக்குப் பின், மீண்டும் இப்போது விஜய் டிவியில் கனாக் காணும் காலங்கள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு எப்போ தும் "உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் கோபமான டீச்சர் வேடம். முத லில் இந்த வேடத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு நிறையத் தயக்கம் இருந்தது.
நானே இப்போது மாணவிதான்... நான் எப்படி வயது அதிகமாகத் தெரியும் டீச்சர் வேடத்தில் நடிப்பது? என்ற யோசனை இருந்தது. ""பட்டம் பெற்று நீ படித்த பள்ளியி லேயே டீச்சராகும் வேடம் உனக்கு. வயதான வேடமல்ல'' என்று உறுதியளித்தனர்.
அதன்பின்தான் சம்மதித்தேன். செட்டில் ஒரே அமர்க்களமாக இருக்கும். இப்போது அந்த கேரக்டருக்கென்று பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. இளம் வயது ரசிகர்களி டையே என்னை பெரிதும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த கேரக்டர். அந்த கேரக் டர் நடிப்பதில் எனக்கிருந்த தயக்கம் போய், இப்போது மகிழ்ச்சியாக நடிக்கிறேன்.
"கல்யாணப் பரிசு' சீரியலில் ஆரம்பத்தில் கொஞ்சம் நெகடிவ் ரோல் எனக்கிருந் தது. இப்போது நல்லவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியல்களைப் பார்க்கும் என்னுடைய நண்பர்கள், ஏன்டீ... விஜய் டிவியில்தான் "உர்'னு இருக் கேன்னு பார்த்தா, கலைஞர் டிவியில் அதுக்கு மேல வில்லி ரோல் மாதிரி செய்றேன்னு உரிமையா கண்டிப்பாங்க. இதெல்லாம் நெகடிவ் ரோல் எனக்கு அவ்வளவு கனகச்சித மாகப் பொருந்துவதால் ஏற்படும் விளைவு. அதனால்தான் இப்படியெல்லாம் "கமெண்ட்' வருகிறது என்று சிரித்துக் கொண்டு இருந்துவிடுவேன்.
நான் ரொம்பவும் ஜாலியான பேர்வழி. அதேநேரத்தில் கோபம் அதிகமாக வரும்.
முகத்திற்கு நேராக திட்டி விடுவேன். என் மேல் தவறு இருந்தால், அவர்கள் திட்டுவ தையும் கேட்டுக் கொள்வேன். ரொம்பவும் அதிகமான ப்ரெண்ட்ஸ் எனக்குக் கிடை யாது. எல்லாம் என்னுடைய பள்ளியில் படித்த ப்ரெண்ட்ஸ்தான். போனில்தான் எங்களின் பேச்சு. வெளியிடங்களில் சந்திப்பது எல்லாம் கிடையாது.
நான் நினைத்தால் என்னை ஷாப்பிங், அவுட்டிங் கூட்டிப் போவதற்கு என் அம்மா, அப்பா இருக்கிறார்கள். செல்லமாக சண்டை போடுவதற்கு ஒரு தம்பி இருக்கிறான்.
அம்மாதான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட். எந்த விஷயத்தையும் அவர்களிடம் நான் பகிர்ந்து கொள்வேன்.
எனக்கு நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பை ஏதாவது சேனல் வழங்கினால், ஊனமுற்றவர்க ளாக இருந்தாலும் பல திற மைகளோடு சாதனைகள் புரிந்து கொண்டிருப்பவர் களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அது அமையும். அவர்க ளுக்கு நிறையச் செய் வதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். இப் போதும் என்னா லான உதவிகளைச் செய்கிறேன். எதிர் காலத்திலும் செய் வேன்...'' என்கி றார் கண்களில் கனவுகள் விரிய...
நன்றி தினமணி
காவ்யா!

5 comments:
hi
நன்றி... எனது இனிய காவ்யாவின் பேட்டி வெளியிட்டதற்கு...
வேறு நல்ல படம் இல்லையா?
verification எடுத்துவிடுங்கள்...
வாங்க கூடுதுறை...
கூடுதுறை நீங்கள் சொன்னது போலவே செய்தாகி விட்டது
thanks
Post a Comment