Sunday, August 31, 2008

விஜய் டிவியில் பிட்டு படம்

தலைப்பை பாத்து ஜொள்ளு விட வேண்டாம். இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய சினிமாவை சுமார் 1 மணி நேரத்திற்கு எடிட் செய்து விஜய் டிவியில் நாளை முதல் ஒளிபரப்ப உள்ளார்கள்.

மக்களின் பேராதரவை பெற்ற படங்களில் கூட சில உப்புமா காட்சிகள் இடம் பெற்று விடும் . இந்த வகையிலான காட்சிகளை எல்லாம் கழித்து விட்டு சுவையாக தரும் ஒரு முயற்சியாக இதை வெளியிடுகிறார்கள்.

இந்த முயற்சிக்காக செம்பருத்தி, கல்லுக்குள் ஈரம், சிங்காரவேலன், பந்தம், டார்லிங்... டார்லிங்... டார்லிங் உள்ளிட்ட படங்கள் டிவியில் திரையிடப்படுகின்றன.

திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது

No comments: