Monday, August 25, 2008

சன் நியூஸ்... ஆன்டி நியூஸ்... ஆப்பு நியூஸ்

கலைஞருக்கு எதிரான பனிப்போரில் கடந்த சில மாதங்களாக மறைமுகமாக ஈடுபட்டு வந்த சன் குழுமங்களின் சேனல்கள் இப்போது நேரடியாகவே அரசை கூறு போடும் வேலைகளில் இறங்கி விட்டது.

கலைஞர் தொலைக்காட்சி துவக்கப்பட்ட பின்பு சன் குழுமத்தில் பணி புரிந்து வந்த திறமையான பலர் கலைஞர் டிவிக்கு மாறினர். இவர்களின் மாற்றம் காரணமாக செய்தி வாசிக்க கூட புதுமுகங்களை தேட வேண்டிய நிலை உருவாகியது சன் நியூஸ் சேனலுக்கு.

பெரும்பாலானோர் போனாலும் பரவாயில்லை. முகங்களுக்காக செய்தி பார்ப்பவர் குறைவு நிஜங்களுக்காக தனது சேனலுக்கு நேயர்களின் ஆதரவு இருந்தால் போதும் என்கிற ரீதியில் தனது வழக்கமான பணியுடன் ஆன்டி நியூஸ் பாணியை சன் குழுமம் துவங்கியது.

இப்போது இந்த பாணி ஜெயா டிவி ரேஞ்சுக்கு விரிவடைந்துள்ளது. கலைஞரின் விழா நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட ஜெயலலிதாவின் அன்றாட போராட்ட அறிவிப்புகள் சன் நியூசில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குடிநீர் பிரச்சனை முதல் குப்பை வரையில் நகர்வலம் தொடர்கிறது. பல பிரச்சனைகளை டார்... டாராக கிழித்தெடுப்பதால் தமிழின் நம்பர் ஒன் நியூஸ் சேனல் என்கிற டிரெடு மார்க் சன் நியூஸ் சேனலுக்கு தான் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சன் நியூசில் ஒளிபரப்பப்பட்ட திருச்சி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை செய்தவர்களுக்கு பார்வை பறிபோன செய்தியை ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி செய்தியை பார்த்து கலைஞர் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதே ரேஞ்சில் அத்தனை செய்திகளும் சன் டிவி பாணியில் டாப் டென் வரிசையில் அமைந்துள்ளது. சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ராஜ் செய்தி சேனலின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாக கவனித்து வரும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்னமும் பல்வேறு நேரலை நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து துவங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

செய்தியாளர்கள் மற்றும் செய்திவாசிப்பாளர் உள்ளிட்ட பலர் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறினாலும் கூட தனது ஸ்திர தன்மையை தக்க வைக்க கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.

பிரேக் நியூஸ்

சன் குழுமத்தில் இருந்து பலர் ஊழியர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறியதை பெரிய அளவில் பேசும் சன் குழும நாளிதழான தினகரனுக்கு, தினமலர் உள்ளிட்ட பல முன்னணி நாளிதழ்களின் தொழிலார்கள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

rapp said...

மாறனின் 'சன்' டிவியாக இருந்த காலம் போய், இப்போ கிரகணக் காலத்தில் இருக்காங்க போல :):):)