பக்கத்து வீட்டில் பிடித்த தீ உன் வீட்டையும் எரிக்கலாம்… இந்த விஷயம் மறந்து வீட்டுக்குள்ளேயே மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து எரியும் தீயை அணைக்கும் வேலையில் ஒவ்வொரு தமிழனும் இறங்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஒரு தமிழனுக்கு முதுகில் அடிவிழும் போது இன்னொரு தமிழன் வேடிக்கை பார்ப்பது இனமான உணர்வுக்கு அர்த்தம் ஆகாது. தமிழகத்தில் அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஓரணியில் திரள இதுவே தக்க தருணம்.
தமிழுக்காய் நீங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால் 50 காசு மட்டும் செலவிடுங்கள். இந்த காசை ஒரு தபால் கார்டுக்காக நீங்கள் செலவிட்டாலே போதுமானது. பாரத பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்பவன், புதுதில்லி… என்று ஒரு வரி விலாசத்தை எழுதி உங்கள் முகவரியுடன் பிரதமருக்கு தமிழனை கொல்லும் சிங்கள பயங்கரவாதத்தை குறிப்பிடுங்கள்.
அமைதியை வலியுறுத்தும் புத்தர் வன்முறைகளையா சொல்லிக்கொடுத்தார் என்று கேள்வி எழுப்புங்கள். இப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். லட்சக்கணக்கில் கடிதம் எழுத சொல்கிறார். நீங்கள் எழுதும் கடிததம் டெல்லியின் அரசியல் சுவர்களை தாண்டி மனிதாபிமானத்திற்கு வழி வகுப்பதாக அமையும்.
இந்திய அரசு இலங்கையுடன் இனியும் தோழமையுடன் இருந்து பயணில்லை. தமிழனில் பாதியில்லாத சிங்களனுக்கு பாடம் கற்பிப்போம். நாம் பயங்கரவாதத்தை ஆயுதமாக்க வேண்டாம். அமைதியின் வழியில் சுதந்திரம் வாங்குவோம்.
இந்த செய்தியை இதிலும் படிக்கலாம்..
No comments:
Post a Comment