Sunday, August 31, 2008

பிள்ளையார் பிடிக்க குரங்கு வரும் - கலைஞர் டிவி

செப்டம்பர் -3 விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் எல்லாம் வழக்கம் போல் ஒரு மணிநேரம் பக்தி பஜனை செய்து விட்டு சினிமா நாயகிகளின் பேட்டிகளும், திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.

இதற்கு விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் என்று ஆர்ப்பாட்டமாய் விளம்பரம் வேறு. ஜெயா டிவி, இமயம் டிவி, மெகாடிவி உள்ளிட்ட அனைத்து சானல்களிலும் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தமிழ்திரையுலகில் முதல் முறையாக என்கிற ரேஞ்சில்.... விளம்பர ஒளிபரப்பு தொடர்கிறது.

ஆனால் கலைஞர் டிவியில் செப்.3 விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் கலைஞர் தானாம். பிள்ளையார் பிடிக்க குரங்காய் போயிடப்போகுது. பேசாம விடுமுறை தினம்னே சொல்லிடுங்கன்னு சேனல் நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டாராம். இப்போது அதையே கடைபிடிக்கிறாங்க...

விஜய் டிவியில் பிட்டு படம்

தலைப்பை பாத்து ஜொள்ளு விட வேண்டாம். இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய சினிமாவை சுமார் 1 மணி நேரத்திற்கு எடிட் செய்து விஜய் டிவியில் நாளை முதல் ஒளிபரப்ப உள்ளார்கள்.

மக்களின் பேராதரவை பெற்ற படங்களில் கூட சில உப்புமா காட்சிகள் இடம் பெற்று விடும் . இந்த வகையிலான காட்சிகளை எல்லாம் கழித்து விட்டு சுவையாக தரும் ஒரு முயற்சியாக இதை வெளியிடுகிறார்கள்.

இந்த முயற்சிக்காக செம்பருத்தி, கல்லுக்குள் ஈரம், சிங்காரவேலன், பந்தம், டார்லிங்... டார்லிங்... டார்லிங் உள்ளிட்ட படங்கள் டிவியில் திரையிடப்படுகின்றன.

திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது

Monday, August 25, 2008

tamil song - test

Get this widget | Track details | eSnips Social DNA

ஸ்டார் டிவியுடன் ஏசியாநெட் ஒப்பந்தம்

இந்திய மொழிகளில் இந்தியில் பல முன்னணி சேனல்களையும் சர்வதேச அளவில் பல்வேறு சானல்களையும் நடத்திவரும் ஸ்டார் நிறுவனம் தமிழில் விஜய் டிவியை நடத்துகிறது. இதற்கு மளையாளத்தில் தனி சேனல் நிறுவனம் ஏதும் கிடையாது.

இந்நிலையில் ஸ்டார் டிவி மளையாளத்தில் ஏசியா நெட்டுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஏசியா நெட்டுடன் இணைந்து புதிய சேனல்களை துவக்கவும் முடிவு செய்துள்ளது.

சன் நியூஸ்... ஆன்டி நியூஸ்... ஆப்பு நியூஸ்

கலைஞருக்கு எதிரான பனிப்போரில் கடந்த சில மாதங்களாக மறைமுகமாக ஈடுபட்டு வந்த சன் குழுமங்களின் சேனல்கள் இப்போது நேரடியாகவே அரசை கூறு போடும் வேலைகளில் இறங்கி விட்டது.

கலைஞர் தொலைக்காட்சி துவக்கப்பட்ட பின்பு சன் குழுமத்தில் பணி புரிந்து வந்த திறமையான பலர் கலைஞர் டிவிக்கு மாறினர். இவர்களின் மாற்றம் காரணமாக செய்தி வாசிக்க கூட புதுமுகங்களை தேட வேண்டிய நிலை உருவாகியது சன் நியூஸ் சேனலுக்கு.

பெரும்பாலானோர் போனாலும் பரவாயில்லை. முகங்களுக்காக செய்தி பார்ப்பவர் குறைவு நிஜங்களுக்காக தனது சேனலுக்கு நேயர்களின் ஆதரவு இருந்தால் போதும் என்கிற ரீதியில் தனது வழக்கமான பணியுடன் ஆன்டி நியூஸ் பாணியை சன் குழுமம் துவங்கியது.

இப்போது இந்த பாணி ஜெயா டிவி ரேஞ்சுக்கு விரிவடைந்துள்ளது. கலைஞரின் விழா நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட ஜெயலலிதாவின் அன்றாட போராட்ட அறிவிப்புகள் சன் நியூசில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குடிநீர் பிரச்சனை முதல் குப்பை வரையில் நகர்வலம் தொடர்கிறது. பல பிரச்சனைகளை டார்... டாராக கிழித்தெடுப்பதால் தமிழின் நம்பர் ஒன் நியூஸ் சேனல் என்கிற டிரெடு மார்க் சன் நியூஸ் சேனலுக்கு தான் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சன் நியூசில் ஒளிபரப்பப்பட்ட திருச்சி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை செய்தவர்களுக்கு பார்வை பறிபோன செய்தியை ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி செய்தியை பார்த்து கலைஞர் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதே ரேஞ்சில் அத்தனை செய்திகளும் சன் டிவி பாணியில் டாப் டென் வரிசையில் அமைந்துள்ளது. சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ராஜ் செய்தி சேனலின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாக கவனித்து வரும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் இன்னமும் பல்வேறு நேரலை நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து துவங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

செய்தியாளர்கள் மற்றும் செய்திவாசிப்பாளர் உள்ளிட்ட பலர் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறினாலும் கூட தனது ஸ்திர தன்மையை தக்க வைக்க கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது.

பிரேக் நியூஸ்

சன் குழுமத்தில் இருந்து பலர் ஊழியர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறியதை பெரிய அளவில் பேசும் சன் குழும நாளிதழான தினகரனுக்கு, தினமலர் உள்ளிட்ட பல முன்னணி நாளிதழ்களின் தொழிலார்கள் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, August 24, 2008

கனா கானும் காவ்யா

கனாக் காணும் காலங்களில்' நான் இளமையான டீச்சர். "கல்யாணப் பரிசு'வில் நான் பாதி நல்லவள், பாதி கெட்டவள். "மேகலா'வில் இப்போ துதான் நான் கோதையாக எண்ட்ரியாகப் போகிறேன். இனிமேல்தான் அதில் என்னுடைய கெட்-அப் எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியும். ராஜ் டிவியில் ஏர்டெல் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். அவ்வப் போது மேடையில் பாடவும் செய்கிறேன்... எல்லாத்துக்கும் மேலாக பி.பி.ஏ. இரண் டாம் ஆண்டு படித்துக் கொண்டும் இருக்கிறேன். அடுத்து எம்.பி.ஏ. முடித்துவிட்டு அது தொடர்பான பெரிய பணியில் சேர வேண்டும் என்று நிறைய கனவுகள் இருக் கின்றது. பார்க்கலாம்...'' -இப்படிப் பேச ஆரம்பித்த பத்து வினாடியில், பட்டாம்பூச் சியாய் படபடக்கிறார் காவ்யா. மீடியாவில் நடிகையாகவும், தொகுப்பாளினியாக வும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் காவ்யா, இனி உங்களுடன்...
நான் ஆரம்பத்தில் ஒரு மேடைப்பாடகியாகத்தான் எல்லோருக்கும் அறிமுகமா னேன். சங்கர் கணேஷ், ஜோஸ்வா ஸ்ருதி, சிந்து பை ரவி, யு.கே. முரளி போன்றவர்க ளின் இசைக்குழுக்களில் பாடியிருக்கிறேன். இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறேன்.
நான் மேடைக் கச்சேரிகளில் பாடுவதைப் பார்த்து விண் டிவியில் ஒரு சிறிய நிகழ்ச் சியை தொகுத்தளிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் வெளிநாட்டில் ஒளிபரப்பாகும் தமிழ் சேனல்கள் சிலவற்றுக்காக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தேன். கடந்த வரு டத்தில் ஜெயா டிவியில் சுசித்ராவின் "ஸ்டார் உங்களுடன்' நிகழ்ச்சியை நான் தொகுத் தளித்தது, ரசிகர்களிடம் பரவலாக என்னை அறிமுகப்படுத்தியது.
விஜய் டிவியில் அப்போது வெளிவந்துக் கொண்டிருந்த "காத்து, கருப்பு' சீரியலில் நான் கதாநாயகியாக நடித்த கதை இரண்டு வாரங்களுக்கு ஒளிபரப்பாகியது. தமிழ்ச் சேனல்களில் என்னைப் பார்த்த உ டி.வி.நிறுவனத்தார், தெலுங்கில் ஒரு சீரியலில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். அந்த சீரியல் இப்போது முடிந்து விட்டது.
"காத்து, கருப்பு' சீரியலுக்குப் பின், மீண்டும் இப்போது விஜய் டிவியில் கனாக் காணும் காலங்கள் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு எப்போ தும் "உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் கோபமான டீச்சர் வேடம். முத லில் இந்த வேடத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு நிறையத் தயக்கம் இருந்தது.
நானே இப்போது மாணவிதான்... நான் எப்படி வயது அதிகமாகத் தெரியும் டீச்சர் வேடத்தில் நடிப்பது? என்ற யோசனை இருந்தது. ""பட்டம் பெற்று நீ படித்த பள்ளியி லேயே டீச்சராகும் வேடம் உனக்கு. வயதான வேடமல்ல'' என்று உறுதியளித்தனர்.
அதன்பின்தான் சம்மதித்தேன். செட்டில் ஒரே அமர்க்களமாக இருக்கும். இப்போது அந்த கேரக்டருக்கென்று பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. இளம் வயது ரசிகர்களி டையே என்னை பெரிதும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த கேரக்டர். அந்த கேரக் டர் நடிப்பதில் எனக்கிருந்த தயக்கம் போய், இப்போது மகிழ்ச்சியாக நடிக்கிறேன்.
"கல்யாணப் பரிசு' சீரியலில் ஆரம்பத்தில் கொஞ்சம் நெகடிவ் ரோல் எனக்கிருந் தது. இப்போது நல்லவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியல்களைப் பார்க்கும் என்னுடைய நண்பர்கள், ஏன்டீ... விஜய் டிவியில்தான் "உர்'னு இருக் கேன்னு பார்த்தா, கலைஞர் டிவியில் அதுக்கு மேல வில்லி ரோல் மாதிரி செய்றேன்னு உரிமையா கண்டிப்பாங்க. இதெல்லாம் நெகடிவ் ரோல் எனக்கு அவ்வளவு கனகச்சித மாகப் பொருந்துவதால் ஏற்படும் விளைவு. அதனால்தான் இப்படியெல்லாம் "கமெண்ட்' வருகிறது என்று சிரித்துக் கொண்டு இருந்துவிடுவேன்.
நான் ரொம்பவும் ஜாலியான பேர்வழி. அதேநேரத்தில் கோபம் அதிகமாக வரும்.
முகத்திற்கு நேராக திட்டி விடுவேன். என் மேல் தவறு இருந்தால், அவர்கள் திட்டுவ தையும் கேட்டுக் கொள்வேன். ரொம்பவும் அதிகமான ப்ரெண்ட்ஸ் எனக்குக் கிடை யாது. எல்லாம் என்னுடைய பள்ளியில் படித்த ப்ரெண்ட்ஸ்தான். போனில்தான் எங்களின் பேச்சு. வெளியிடங்களில் சந்திப்பது எல்லாம் கிடையாது.
நான் நினைத்தால் என்னை ஷாப்பிங், அவுட்டிங் கூட்டிப் போவதற்கு என் அம்மா, அப்பா இருக்கிறார்கள். செல்லமாக சண்டை போடுவதற்கு ஒரு தம்பி இருக்கிறான்.
அம்மாதான் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட். எந்த விஷயத்தையும் அவர்களிடம் நான் பகிர்ந்து கொள்வேன்.
எனக்கு நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பை ஏதாவது சேனல் வழங்கினால், ஊனமுற்றவர்க ளாக இருந்தாலும் பல திற மைகளோடு சாதனைகள் புரிந்து கொண்டிருப்பவர் களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அது அமையும். அவர்க ளுக்கு நிறையச் செய் வதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். இப் போதும் என்னா லான உதவிகளைச் செய்கிறேன். எதிர் காலத்திலும் செய் வேன்...'' என்கி றார் கண்களில் கனவுகள் விரிய...
நன்றி தினமணி
காவ்யா!

Friday, August 22, 2008

இமயம் தொலைக்காட்சியில் மிமிக்ரி மூவி

இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "மிமிக்ரி மூவி'. இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை தாங்கள் விரும்பும் நடிகர்கள், பிரபலங் கள் பெயர்களைக் கூறினால் அவர்களைப் போன்றே மிமிக்ரி செய்து நேயர்களை மகிழ்விக்கி றார் மிமிக்ரி கலைஞர் செந்தில்.நிகழ்ச்சியின் இடையே திரை யுலகைப் பற்றிய கேள்வி-பதில் பகுதியும் இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கும் இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

மக்கள் தொலைக்காட்சியில் சிரிப்போ சிரிப்பு

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய விளை யாட்டு நிகழ்ச்சி "சிரிப்போ சிரிப்பு'. மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் இந்த விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்ப டும். சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சியின் ஒரே விதிமுறை.ú வ டி க் û க ச் சிரிப்பு, விஷமச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, ஆதாயச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு என சிரிப்பின் பல பரிமா ணங்களை வெளிப்ப டுத்தலாம்.போட்டியாளர்கள் சிரித்துக்கொண்டு இ ரு க் கு ம் ú ப ô து இ û ட யி û ட ú ய தொகுப்பாளர் சில கேள்விகளைக் கேட்டு அவர்களைத் திசைதிருப்ப முயற்சி செய்வார். ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும். யார் அதிக நேரம் சிரிக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு வழங்கப்ப டும்.இந்த நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவியில் பெண்களுக்கான 20-20

பெண்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் "20-20' என்ற புதிய நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. "20-20' இது கிரிக்கெட் அல்ல; அதை விட சுவாரஸ்யமானது' என்ற வாச கங்களுடன் ஒளிபரப்பாகவுள்ள இந்த பொது அறி வுப் போட்டி நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங் கேற்க முடியும்.இதில் ஒரே நேரத்தில் 20 பெண்கள் பங்கேற்பார் கள். ஆனால் பல சுற்றுகளுக்குப் பிறகு இறுதிச் சுற் றுப் போட்டியில் ஒரு பெண் மட்டுமே வெற்றி பெற முடியும். அவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும்.பல துறைகளிலிருந்து எளிமையான அதே சம யம் வித்தியாசமான கேள்விகளைக் கேட்டு பெண்க ளின் அறிவுத்திறனை அறியச் செய்யும் இந்த நிகழ்ச் சியை அனுஹாசன் தொகுத்து வழங்குகிறார்.பெண்களுக்கான "20-20' புதிய நிகழ்ச்சி, செப்டம் பர் மாதம் முதல் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி றது.