Friday, October 31, 2008
உண்ணாவிரதத்தில் நடிகர் அஜித் ஆஜர் : பத்திரிகையாளர்களுக்கு செம டோஸ்
முழுச்செய்தியை படிக்க சொடுக்குங்கள்
நீங்கள் நாக்கை தொங்கப்போட்டு அலைபவரா?
Sunday, October 26, 2008
தமிழ் நடிகையை காதலித்த பாக். வீரருக்கு கல்தா?
இந்த செய்தியை தொடரவும் மற்ற செய்திகளை படிக்கவும்
இங்கே சொடுக்குங்கள்
Sunday, October 5, 2008
ஒரு அரசியல்வாதி டிராக்டர் ஓட்டுகிறார் (படம்)
திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் கட்சியில் வளர்ச்சியில்லை.... அதிமுகவுடனும் கூட்டு சேர்ந்து தேய்பிறையாய்.... தமிழகத்தில் மதிமுக என்ற கட்சியின் எதிர்காலம் தான் என்ன? தொண்டர்களோடு தொண்டராய் நிற்கிறார்... வயலுக்கு செல்கிறார்.... டிராக்டர் ஓட்டுகிறார்... ராகுலுக்கு முன்பே மண் சுமந்தார்... எல்லாம் செய்து பார்த்தும் கட்சி மக்களிடம் போய் சேரவில்லை.... ஆறுதலுக்காக இந்த படத்தை பதிவிடுகிறேன்...
திமுகவிற்கு தோல்வி பயம் : அமைச்சர் ஒப்புதல்
...........
இங்கே
ஈழத்தமிழனுக்காக ஒரு கடிதம் எழுது தோழா!
பக்கத்து வீட்டில் பிடித்த தீ உன் வீட்டையும் எரிக்கலாம்… இந்த விஷயம் மறந்து வீட்டுக்குள்ளேயே மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து எரியும் தீயை அணைக்கும் வேலையில் ஒவ்வொரு தமிழனும் இறங்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஒரு தமிழனுக்கு முதுகில் அடிவிழும் போது இன்னொரு தமிழன் வேடிக்கை பார்ப்பது இனமான உணர்வுக்கு அர்த்தம் ஆகாது. தமிழகத்தில் அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஓரணியில் திரள இதுவே தக்க தருணம்.
தமிழுக்காய் நீங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால் 50 காசு மட்டும் செலவிடுங்கள். இந்த காசை ஒரு தபால் கார்டுக்காக நீங்கள் செலவிட்டாலே போதுமானது. பாரத பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்பவன், புதுதில்லி… என்று ஒரு வரி விலாசத்தை எழுதி உங்கள் முகவரியுடன் பிரதமருக்கு தமிழனை கொல்லும் சிங்கள பயங்கரவாதத்தை குறிப்பிடுங்கள்.
அமைதியை வலியுறுத்தும் புத்தர் வன்முறைகளையா சொல்லிக்கொடுத்தார் என்று கேள்வி எழுப்புங்கள். இப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். லட்சக்கணக்கில் கடிதம் எழுத சொல்கிறார். நீங்கள் எழுதும் கடிததம் டெல்லியின் அரசியல் சுவர்களை தாண்டி மனிதாபிமானத்திற்கு வழி வகுப்பதாக அமையும்.
இந்திய அரசு இலங்கையுடன் இனியும் தோழமையுடன் இருந்து பயணில்லை. தமிழனில் பாதியில்லாத சிங்களனுக்கு பாடம் கற்பிப்போம். நாம் பயங்கரவாதத்தை ஆயுதமாக்க வேண்டாம். அமைதியின் வழியில் சுதந்திரம் வாங்குவோம்.
இந்த செய்தியை இதிலும் படிக்கலாம்..
Wednesday, October 1, 2008
நமீதா ஆட்சி அமைப்போம்
சில்க் சுமிதா, ஷகிலா… என்று எத்தனை பேர் தமிழக சினிமாவில் இளசுகளை ஆட்டிப்படைத்து கொடுங்கோல் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் நம்ம நமீதா போட்டியிட்ட மறு நிமிஷமே… பாபிலோனா மாதிரி எத்தனை பேருக்கு டெபாசிட் கூட கெடைக்காமல் போயிருக்குன்னு தெரியுமா?
அது ஒரு காலம்… அவங்க ஆட்சியில இருக்கும் போது தான் லிட்டர் லிட்டரா ஜொள்ளு, ஆறு மாதிரி ஓடிச்சி… அவங்க ஆட்சியில எப்பய்யா மின் வெட்டெல்லாம் இருந்துச்சி? நமீதா கண்ணை சொருகினாலே… ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.
ஒரு விஷயத்தை நீங்க யோசிச்சு பாக்கனும்… எத்தனை பொண்ணுங்களோட மானத்தை அவங்க காப்பாத்தியிருக்காங்க தெரியுமா? ஓட்டல் கட்டுறார்… ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டுறார்னு உங்க பாட்டுக்கு அடுக்குறீங்களே… என்னிக்காவது சேலை கட்டியிருக்காங்களா? மாட்டாங்க… ஏன் தெரியுமா?
அவங்களும் காந்தியடிகள் மாதிரி…. வீதியில ஒருத்தருக்கு சட்டையில்லங்கிறதை பாத்து சட்டையே போடாம தியாகம் செஞ்சார் காந்தி…. தான் மட்டும் சேலைகளை வாரிக்குவிச்சா, ஏழைகள் சேலைக்கு எங்கே போவார்கள்? அப்படிங்கிற சிந்தனையும் அவங்க கிட்ட இருந்துச்சு.
ஹாய் மச்சான்ஸ்ன்னு மானாட மயிலாட நிகழ்ச்சியில ஒவ்வொரு தடவையும் அவங்க சொல்லும் போது, எங்கள் இதயத்தின் நிரந்தர முதல்வரே நீங்கதான்னு முடிவெடுத்திருக்கோம். அவங்களுக்காக கோயில் கட்ட முடிவெடுத்த ஒருத்தர் இப்போ உங்களில் ஒரு வலைப்பதிவராக இருக்கிறார்.
இதன் தொடர்ச்சி... இங்கே