Monday, February 16, 2009

சாதிக்கட்சிகள் ஆரம்பிப்பவர்களே திருந்த மாட்டீர்களா?

தமிழகத்தில் சாதிக்கட்சிகள் எத்தனை துவங்கினாலும் கூட மக்களின் பார்வை என்னவே வைட்டமின் "ப" மிகுதியாக இருக்கும் கட்சிகள் மத்தியில் தான் இருக்கும். தமிழக ஜனநாயகம் கேலிக்கூத்தாய், நடிகர்கள்... ஜாதிய தலைவர்கள் பின்னால் போய் கொண்டிருப்பதை மாற்றமுடியாத அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.

ஜாதி கட்சி அரசியல் என்பது பதவி சுகத்திற்கானது இல்லை என்ற போதிலும் தனிப்பட்ட ஜாதிய தலைவர்களின் பின்புலத்திற்கு நிச்சயமாய் பயன்படத்தான் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதலியார் என்ற அனைத்து வகுப்பினரையும் ஒன்று திரட்டி ஆரம்பிக்கப்பட்ட புதிய நீதிக்கட்சி இப்போது இருக்கிறதா என்ற தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் பிரபலமான அதன் தலைவர் ஏசி சண்முகம் நல்ல முறையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

இதே போல தமிழ்நாடு வன்னியர் சங்கங்களின் பேரவையில் இருந்து தான் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியது. இக்கட்சி புதுச்சேரி, வடஆற்காடு, தென்னாற்காடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தென்மாவட்டங்களில் வன்னிய சமுதாய கட்சியாகவே மக்கள் பார்க்கிறார்கள். இதன் பல தலைவர்கள் இன்று தனிப்பெறும்பான்மையோடு ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும், தங்களின் பேக்ரவுண்டை நன்றாகவே பெருக்கிக்கொண்டார்கள்.

நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒரு சில சங்கங்களை இணைத்து நடிகர் சரத்குமார் உருவாக்கிய சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை நாடார்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாடார் சமுதாய மக்களை தன் கூட்டத்திற்காக திரட்டுகிறார் சரத்குமார். இவர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் சமீபத்தில் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 500 வாக்குகள் கூட பெற முடியவில்லை. இதே போன்று யாதவர்களுக்காக கட்சி துவங்கிய கண்ணப்பன் கதை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

நடிகர் கார்த்திக் ஜாதிய அரசியலை நம்பி களத்தில் குதித்து பல லட்சங்களை இழந்தார் என்பது தேவர் சமுதாயத்தில் உள்ள அவரது நண்பர்களுக்கு தெரியும். இன்றும் கூட ஜாதிக்காக ஒரு கட்சியை துவங்கி அதில் தென்மாவட்டத்தை சேர்ந்த எனதருமை நண்பர் எஸ்.ஜே.சூர்யாவை பலிகடாவாக்க ஒரு கூட்டம் துடித்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஜாதிய ரீதியில் சென்ற இயக்கங்கள் இப்போது... இந்த பாதை தவறானது என ஜனநாயகத்திற்கு திரும்புகின்றன. உதாரணமாக சொல்வதென்றால் திருமாவின் விடுதலை சிறுத்தைகள், பாமகவில் இப்போது குறிப்பிட்ட சமுதாயத்தினரை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் தென்மாவட்டக்காரராக இருந்தால் இந்த கட்சிகளில் நீங்களும் கூட பதவி வாங்க முடியும்.

நிலைமை இப்படி இருக்க ஜாதிய ரீதியில் இன்றளவும் கட்சிகள் தோன்றுவது வாடிக்கையாகி விட்டது. நேற்றைக்கு கொங்கு வேளாளர் சமுதாயத்தில் இருந்து ஒரு கட்சி உதயமாகியுள்ளது. இதே போன்று நாளையும் பல கட்சிகள் உருவாகலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. சிலர் தனது சொத்துக்களை பாதுகாக்க ஜாதிய கட்சிகளை துவக்குகிறார்கள். அல்லது முதல்வர், அமைச்சர் கனவோடு துவக்குகிறார்கள். இதில் முன்னவர்கள் ஜெயிக்கிறார்கள். பின்னவர்கள் முதல் இழந்து ஓடுகிறார்கள். கொங்கு வேளாளர்கள் எப்படியோ தெரியவில்லை.

Thursday, February 12, 2009

என் பார்வையில் அகதிகள்...

அகதி என்ற சொல்லை விட புலம்பெயர்ந்தவர்கள் என்ற வார்த்தைதான் சரியான பதம் என்று எனக்கு தோன்றுகிறது.

அகதி என்பது தான் இன்றளவும் அரசாங்கத்தால் இவர்களுக்கு வழங்கப்படும் முத்திரை. தமிழகத்தை பொறுத்தவரையில் 117 அகதிகள் முகாம்களில் சுமார் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த எம் தமிழ்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலக வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான மக்கள் நீண்டகாலம் தன் சொந்த நாட்டுக்கு திரும்பாத நிலை இலங்கை அகதிக்கு மட்டுமே உண்டு.

அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களின் மூலம் இந்தியாவிற்கு (India) பல நாடுகளில் இருந்து வருகின்றனர். குறிப்பாக இலங்கையை தவிர்த்து மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்த சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தாலும் இவர்களை இந்திய அரசு கண்ணியம் தவறாமல் நடத்துகிறது.

ஆனால் இலங்கையை (srilanka) பொறுத்தவரையில் தமிழ்மக்கள் இந்திய குடியுறிமையும் இல்லாமல் இலங்கை குடியுரிமையும் இன்றி தவித்த காலகட்டங்கள் உண்டு. வாக்களிக்க அதிகாரமின்றி வாழ்ந்த மலையக தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை தனது மக்களாக பாவிக்காமல் இலங்கை அகதிகள் என்றே இனம்காட்டியது இந்திய அரசு. இவர்களுக்காக திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் அகதிகள் முகாம்களை அமைத்தும் கொடுத்தது.

தமிழகத்தில் (Tamilnadu) உள்ள பொரும்பாலான அகதிகள் முகாம்கள் சில காலம் வரையில் சரியான மின்வசதி, அடிப்படை வசதிகள் இல்லாமையால் சேரி போன்றே தோற்றமளித்தன. எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அப்பாவி இலங்கை தமிழர்களுக்காக உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளை தமிழக மக்களிடம் இருந்து பெற்று அகதி முகாம்களில் உள்ள தமிழ்மக்களிடம் வழங்கிய தன்னார்வு அமைப்புக்களை பார்த்திருக்கிறேன்.

அகதி முகாம்களின் மீது தமிழக போலீசாருக்கு (Police) எப்போதுமே ஒரு சந்தேக கண் இருந்து வருகிறது. பல திருட்டு வழக்குகளுக்காக அப்பாவி தமிழர்களை பொலிசார் சித்திரவதை செய்திருப்பதை கண்ணால் பார்த்திருக்கிறேன். அகதி தானே... இவண் மேல 307 பார்ட் 2 கேச போடுய்யா... என்று என் கண்முன்னால் கதைத்த போலீஸ் அதிகாரிகளும் உண்டு.

அகதி என்ற காரணத்திற்காக பூர்வீக நாட்டில் எந்த உரிமையையும் கேட்க முடியாத அவலம் இந்தியர்களுக்கு மட்டுமே உண்டு. அடிமாடுகளை போன்று இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் இவர்களின் நிலை என்று தான் மாற போகிறதோ... இந்த சாபத்தை நீக்க எந்த ராமன் வரப்போகிறானோ

Wednesday, February 11, 2009

அடல்ஸ் ஒன்லி படமா இது...

  • எல்லாத்தையும் அவிழ்த்துவிட்டீர்கள்...
  • அம்மணமாய் கடற்கரை வரைக்கும் வந்துட்டேன்...
  • இனி இழப்பதற்கென்று எதுவுமில்லை...
  • என் அழுகையின் குரல் யார் காதிலும் விழவில்லை..
  • என்ன செய்வது?
  • இங்கே பிரங்கிகளின் சத்தத்திலும் செல்களின் தாக்குதல்களிலும்
  • என் குரல் உங்களுக்கு கேட்கவா போகிறது?
  • என்னதான் நீங்கள் கிழித்தாலும்...
  • ஒரு ம....ரையும் புடுங்க முடியாது...
  • கடலில் தள்ளினால் கட்டுமரமாகும் அரசியல்வாதியல்ல நாங்கள்...
  • உங்களை சின்னாபின்னமாக்க போகும் சூறாவளி...

Thursday, February 5, 2009

உப்புமா இலங்கை அணியும்... ஒண்டிவீரன் யுவராசும்

இலங்கை அணியின் ஆட்டம் கடந்த சில மாதங்களாகவே உப்புச்சப்பின்றி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த சூழலை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் இந்திய அணியினர் மட்டுமே. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏதோ தான் தான் வவுனியாவிற்கும் முல்லைத்தீவிற்கும் போய் சண்டை போட்டு ஜெயித்ததை போன்று பாக் மற்றும் வங்கதேச அணிகளை வென்ற மமதையில் இருந்தார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் விளையாடியதை பார்க்கும் போது ஏதோ தெருவோரு கிரிக்கெட்டில் சிறுபிள்ளைகள் விளையாடியதை போலத்தான் இருந்தது. வங்க தேசத்திடம் பைனலில் உதை வாங்கியிருக்க வேண்டியவர்கள்... முரளியின் தயவால் தப்பினார்கள்.

இப்போது மொத்தமாய் சேர்த்து இந்திய அணியிடம் உதை வாங்குகிறார்கள். முரளி, மெண்டிஸ் உட்பட மாயஜால பந்து வீச்சாளர்களை கங்கனம் கட்டி