Thursday, January 29, 2009

இலங்கை பிரச்சனை இன்னுயிர் கொடுத்த அக்கினிகுஞ்சு

இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழக அளவில் எந்தவித உயிரோட்டமான முயற்சிகளையும் அரசு எடுக்க முடியாமல் தவித்துவருகிறது. இந்நிலையில் முல்லைத்தீவில் 2 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் செத்துமடிவது தொடர்கதையாகியுள்ளது. பசியிலும், பட்டினியிலும், படையினரின் கொலைவெறித்தாக்குதல்களிலும் தமிழன் செத்துக்கொண்டிருக்க இங்கே வெந்ததை தின்று விதிவந்தால் சாவோம்... என்று தமிழனம் வேடிக்கை பார்க்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை.

ஒரு புறம் அரசியல்கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி தமிழனத்தை காக்க கொடுக்கும் குரல் இந்திய அரசின் கொல்லைப்புற வாசல்கதவைக்கூட திறக்காது என்பது எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த உண்மையாகிவிட்டது. பாரதி சொன்னது போல அக்கினி குஞ்சொன்று கண்டேன்... அதை ஆங்கோர் காட்டில் பொந்திடை வைத்து.... வெந்து தணிந்தது காடு... தழல் வீரத்திற்கும் உண்டோ...குஞ்சென்றும் மூப்பென்றும்... என்று சொன்னதை போல தூத்துக்குடியை சேர்ந்த குமரன் என்ற பத்திரிகையாளன் சென்னையில் தீக்குளித்துள்ளார்.

இந்த பொறி... தமிழின உணர்வுள்ளவர்களின் அத்தனை பேருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. திரைத்துறையில் இருந்து போராட்டத்தை சந்தித்த அமீரும், சீமானும் சிறைக்கம்பிகளில் இருந்து பெருமுயற்சியுடன் மீளவேண்டிய காலகட்டத்தில் இவரின் தீக்குளிப்பு இப்பிரச்சனையில் ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனாலும் இதற்கு பின்பும் கூட இந்திய அரசோ, தமிழக அரசோ எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள போவதில்லை.

முதல்வர் கருணாநிதி பேசினார் இப்படி... இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக பொதுக்குழு விரைவில் கூடுகிறது. அப்போது எடுக்கப்படும் முடிவு தமிழர்களுக்கு பொன்னாடை போர்த்துவதாக அமையும்... என்றார். அவரது வாக்குப்படியே வைத்துக்கொள்வோம். 3ம் தேதி நெருங்கித்தானே வருகிறது. நீங்கள் என்ன பொன்னாடையை போர்த்த போகிறீர்கள் என்று ஒட்டு மொத்த தமிழகமும் பார்க்கத்தானே போகிறது?

அடுத்து ஜெயலலிதா சொல்கிறார்... புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேண்டும் என்று... அது சரி ராஜபக்சேவிற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவரும் இதைத்தானே சொல்கிறார்? கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிணந்தின்னி பேய்களின் ஆசை உங்களுக்குள் ஒளிந்து தான் இருக்கிறது.

தமிழர் பிரச்சனைக்காக இவர்களையெல்லாம் தலைவர்களாக கொண்ட நாங்கள் எந்த வகையிலும் நியாயம் பெற போராட முடியாது. ஒரு வேளை தமிழர்களாகிய நாங்கள் இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவர்களாகவே இருந்திருந்தால் ஒருவேளை, சார்புடைய நாடுகளின் ஆதரவு கரமாவது நீண்டிருக்கும். ஆனால் தமிழன் என்ற இனத்திற்காய் எந்த ஒரு தேசமும் இல்லை. ஒட்டுக்குடித்தனம் நடத்தியே நாம் பிழைப்பை கழிக்கிறோம். எத்தனை நாடுகள் நம்மை வைத்து வளர்ந்தாலும், கடைசியில் "போடா நாயே... உனக்கென்னடா உரிமை? என்று கேட்பதையெல்லாம் சகித்து வாழ்கிறோம்.

காட்டுவாசிகளுக்கு நாகரிகம் கற்றுத்தந்தோம்... வேட்டையாடிகளுக்கு வீடுவாசல் கட்டித்தந்தோம்... கடைசியில் அவர்கள் வீட்டில் ஒன்டிக்குடித்தனம் நடத்துபவர்களாகவே நாமிருக்கிறோம். ஒரு பதிவில் லோசன் சொன்னார் தமிழினம் என்றாலே ஏமாளிதானே... என்று உண்மைதான். ஏமாளியான நம்மீது இப்போது சவாரி செய்கிறார்கள்.

ஒன்றை இப்போது சிந்திக்க வேண்டும். இந்தியன் இந்தியன் என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனாலும் இந்தியன் என்றால் இந்தி பேசுபவன் மட்டும் தான் என்கிறது ஒரு வர்க்கம். சரி ஒரு முடிவுக்கு வருவோம். இலங்கையில் குடிபெயர்ந்தவர்கள் தானே தமிழர்கள். அவர்கள் இந்திய பூர்வீக குடிகள் தானே... அவர்களும் ஒருவகையில் இந்தியன் தானே? அப்புறம் ஏன் ஒரு கன்னடனோ... மளையாளியோ... பீகாரியோ... காஸ்மீரியோ... சக இந்தியன் ஒரு புறம் சாகிறான் என்று குரல் எழுப்பவில்லை. இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்து தமிழனுக்காய் குரல் ஒலிக்கிறது? உகூம் எவனும் எழுப்ப மாட்டான்.

ஒவ்வொருவனும் அவனுக்காகவும், அவன் இனத்திற்காகவும் மட்டுமே வாழ்கிறான். கன்னடன் தனக்காக போராடுகிறான்.கஷ்மீரி தனக்காக போராடுகிறான் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வந்து விட்டது. இவர்களிடம் இருந்து எந்த ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழன் தான் விடுதலைப்புலி... விடுதலைப்புலி தான் தமிழன் என்ற வகையில் இந்திய அரசு நம்பிக்கொண்டிருக்கிறது. புலிகளை கொன்றாலும் அங்கேயும் ஒரு தமிழன் தான் செத்துப்போகிறான். இன்னொரு தமிழன் தான் விடுதலைப்புலியாகவும் மாறுகிறான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழனத்தையும் கழுவிலேற்ற துடிக்கும் இலங்கை அரசுக்கு எல்லாவித உதவிகளையும் செய்து, ராஜபக்சேவிற்கு விருந்து கொடுத்து உபசரிப்பது என்பது ஏற்க தக்கதா?

ராஜிவ்காந்தியை விடுதலைபுலிகள் ஒரு முறைதானே கொன்றார்கள்... நீங்கள் எத்தனை தமிழனை மறைமுகமாக கொன்று குவிக்கிறீர்கள். ஒரு கொலைக்குற்றவாளி என்ற காரணத்திற்காக நளினி காலங்காலத்திற்கும் சிறைக்கம்பிகளை எண்ணுகிறார்கள் என்றால், இந்திய அரசை நிர்வாகம் செய்யும் நீங்கள் தமிழர்களை கொன்று குவிக்கும் கொலையாளிக்கு உதவியதாக எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்?

ஒரு சீக்கியன் தானே அன்னை இந்திராவை கொன்றது? அதற்காக எல்லா சீக்கியனையும் இப்படி நீங்கள் கூண்டில் ஏற்றி குற்றவாளியாக்கினீர்களா?

தமிழனும் இந்தியன் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியென்றால் தமிழனுக்கு மட்டும் ஏனிந்த அவலம்? இந்திய கட்டமைப்புக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிதியாதாரம் அவசியம் என்று எல்லோரும் கூறி அவர்களின் முதலீட்டை பெறுகிறீர்களே... அதில் எத்தனை தமிழனின் வியர்வையும், ரத்தமும் கலந்திருக்கிறது. அவர்களின் பணத்தை பெற்றுக்கொண்டே... அவர்களுக்கு துரோகம் செய்வது, விருந்து கொடுப்பவர்களையே விஷம் வைத்து கொல்லும் செயல் அல்லவா?

தமிழனத்திற்காக இன்று எரிந்த அக்கினிகுஞ்சு நாளை ஒரு காட்டையே நிச்சயமாய் எரிக்கத்தான் போகிறது. அதில் இந்திய தேசம் என்ற வார்த்தையும் கூட பொசுங்கி போகிலாம். வல்லரசு என்று கனவுகளை சுமக்கும் தமிழனுக்காய் ஒரு நல்லரசு மலரத்தான் போகிறது.

Friday, January 23, 2009

அய்யகோ தமிழினமே அழிகிறது

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நமது தொப்புள்கொடி உறவுகளுக்காக ஆற்றிய உரையின் தலைப்பு இது.

இந்த உரையிலும் அவரால் தனித்தன்மையுடன் உரையாற்ற முடியாத அளவிற்கு அதிமுக சொல்வதை போன்று மைனாரிட்டி அரசுக்குரிய ஒரு பலவீனமான காய்நகர்த்துதலே தோன்றுகிறது.

அவரது உரையில் .... இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் உள்ள தனது மக்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்கள் படும் துயரங்களையும், இழிவையும் மறப்பதில்லை.ஒரு நாள் வரும்... அன்று இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும். அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும். என்றார்.

அந்த நாள் எப்போது வரும் என்பதை தான் கோடிக்கணக்கான தமிழர்கள் கேட்கிறார்கள். ஆட்சியா? தமிழின உணர்வா? என்று தராசு தட்டில் எடை போட்டால் எந்த திராவிட கட்சியிலும் தமிழின உணர்வு வெயிட்டாக இருக்காது. அதே நிலை தான் இன்று திமுகவிற்கும். இந்தியா பலவீனமாக இருக்கிறதோ என்னவோ திமுகவின் சட்டமன்ற பலம் குறைவாகவே இருப்பதை தான் முதல்வர் இப்படி சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

அதிமுகவின் நாடகம்
ஒரு நாடகத்திற்கு துணை போக முடியாது என்று எதிர்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கும் கருத்தும் கூட ஏற்புடையதல்ல. ஆளுங்கட்சிக்கு எதிராகவே இருக்க வேண்டும் என்ற ஒரே கொள்கைக்காக தமிழ் இன உணர்வுகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பேசும் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறப்புக்களும் இந்த வார்த்தையை உபயோகிக்க தகுதியற்றவர்களே...

திருமாவின் ஒரு கை ஓசை மட்டும் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. பா.ம.கவும் தமிழ் பற்றுள்ள அமைப்புக்களும் எடுக்கும் எந்த நடவடிக்கையும் மத்திய அரசின் காதுகளை சென்றடைய போவதில்லை.

தீர்க்கமான ஒரு முடிவாக ஒட்டுமொத்த தமிழகமும் தன்வீடு பற்றி எரிவதை சிந்தித்து, நெருப்பு நரிகளின் கொட்டத்தை அடக்க களமிறங்க வேண்டும். அதுவரையில் இலங்கையில் தமிழன் சிந்தும் ரத்தத்தை நிறுத்த முடியாது.

இணைய வானொலிகள் (0nline tamil radio) Tamil internet fm

இணைய வானொலிகள்
(0nline tamil radio) Tamil internet fm
* சீன வானொலி தமிழ் - சீனா http://ta.chinabroadcast.cn/
* பிபிசி தமிழோசை - ஐக்கிய இராச்சியம் - http://www.bbc.co.uk/tamil/
* இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - இலங்கை - http://www.slbc.lk/
* ஷ்யாம் ரேடியோ - இந்தியா - http://www.shyamradio.com/
* சக்தி எப் எம் - இலங்கை - http://www.shakthifm.com/
* தென்றல் இணையத்தமிழ் வானொலி - ஐக்கிய அமெரிக்கா - http://www.thendral.com/
* உலகத் தமிழர் வானொலி - ஐக்கிய இராச்சியம் - http://www.wtruk.com/index.html
* தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஐக்கிய இராச்சியம் - http://www.tbcuk.com/
* ஒலி (இணைய வானொலி) - சிங்கப்பூர் - http://www.oli.sg/
* தேமதுரைத் தமிழோசை - நியூசிலாந்து - http://www.tamilmedianz.com/
* தென்றல் உலக வானொலி - ஜெர்மனி - http://www.thenralworldradio.de/
* மெரினா அமெரிக்கத் தமிழ்ழோசை - ஐக்கிய அமெரிக்கா - http://www.merina.com/
* வெரிதாசு ஆசிய வானொலி - http://www.tamil.rveritas-asia.org/
* கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (24 மணிநேரமும்) - கனடா - http://www.ctbc.com/
* கீதவாணி (24 மணிநேரமும்) - கனடா - http://www.geethavaani.ossai.com/
* கனேடிய தமிழ் வானொலி (24 மணிநேரமும்) - கனடா - http://www.ctr24.com/
* உலகத் தமிழ் ஓசை - http://www.intamil24.com/
* புலிகளின்குரல் தமிழீழ வானொலி - இலங்கை - http://pulikalinkural.com/
* ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஆஸ்திரேலியா - http://www.atbc.net.au/
* அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் - ஐக்கிய இராச்சியம் - http://www.allovertamil.com/
* நோர்வே தமிழ் முரசம் - நோர்வே http://www.tamilmurasam.com
* கலசம் - http://www.kalasam.com/
* வத்திக்கான் வானொலி - வத்திக்கான் - http://www.oecumene.radiovaticana.org/in3/index.asp
* ஐரோப்பிய தமிழ் வானொலி (24 மணிநேரமும்) - ஜேர்மனி - http://www.etr24.com/
* லண்டன் தமிழ் வானொலி (24 மணிநேரமும்) - ஐக்கிய இராச்சியம் - http://www.firstaudio.info/
* சங்கநாதம் - ஆஸ்திரேலியா - http://www.sanganatham.net/
* தமிழ் முழக்கம் - ஆஸ்திரேலியா - http://www.2000fm.com/tamil/index.htm
* மின்னல் (வானொலி) - மலேசியா - http://www.maraz.us/minnal/index.htm

Friday, January 9, 2009

மதுவிலக்கு கொள்கை தமிழகத்தில் எடுபடுமா?

தமிழகத்தில் 8.500 மதுக்கடைகள் துவக்கப்பட்டன. இந்த நிலையில் படிப்படியாக 9,500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால் தமிழகத்தில்
3924 பொது நூலகங்கள் உள்ளன என்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல்கட்சிகள் சில மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றன. இதையடுத்து மதுக்கடைகளின் வேலைநேரம் இரவு 10 மணியுடன் முடிவடையும் என்று தமிழக அரசு அறிவித்தது. வரவேற்க கூடிய விஷயம் தான் இது என்றாலும்.

மதுவை ஒழிப்போம் என்று வரிந்து கட்டும் அரசியில் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரே மது அருந்தவில்லை என்று மக்கள் மத்தியில் அறிவிக்க முடியுமா? அப்படி செய்தால் அதை கண்டிப்பாக தமிழக மக்கள் வரவேற்பார்கள்.

கே.உதுமான்
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்

Friday, January 2, 2009

ஒரு சோதனை புக்மார்க் திரட்டி _

ஒரு சோதனை புக்மார்க் திரட்டி உங்கள் பதிவை இணைக்க இணையத்திற்கு வாருங்கள்...
இங்கே சொடுக்கி சோதனை திரட்டிக்கு செல்லலாம்

ஒரு சோதனை புக்மார்க் திரட்டி

ஒரு சோதனை புக்மார்க் திரட்டி உங்கள் பதிவை இணைக்க இணையத்திற்கு வாருங்கள்...
இங்கே சொடுக்கி சோதனை திரட்டிக்கு செல்லலாம்